பக்கம்:கல்வி உளவியல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 107° கும் உறுப்புக்கள், குருதி மண்டலம், மூச்சு மண்டலம் ஆகியவற்றின் உறுப்புக்கள் யாவும் நல்ல வளர்ச்சியுறுகின்றன. வளர்ச்சியில் அதிக மாற்றம் தெரிகிறதில்லை ; ஆனல் வளர்ச்சியுற வேண்டிய நிலையை எய்தி யிருப்பதை அறிகின்ருேம். சிறுவனின் நேரம் பெரும்பாலும் பள்ளிகளில் கழிகின்றது. சிறுவனின் மனவளர்ச்சியைக் குறித்தும் அவன் சமூகத்தில் பழகுவதைக் குறித்தும் ஆசிரியர் கவனிக்க வேண்டியவராகின்ருர். தன் குடும்பத்திலுள்ளவர் களைத் தவிர, வெளியார்களுடன் சிறுவன் முதல் முதலாகப் பழகும் வாய்ப்புக்களைப் பெறுகின்ருன்; இதல்ை பலருடன் பழகும் அகன்ற அனுபவம் ஏற்படுகின்றது; எண்ணங்களும் கருத்துக்களும் மொழி வளர்ச்சியும் சிறிது ஏற்படவே, சிறுவனின் விடுப்பூக்கம் செயற்படத் தொடங்குகின்றது. எதையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அவா ஏற்படுகின்றது. எனவே, மூத்தோர்களிடம் விளுமாரிகளைப் பொழிந்த வண்ணமிருக்கின்ருன். ஆசிரியர்களும் பெற்றேர்களும் சிறுவனுக்குத். தக்க விடையளித்து அவன் அறிவை வளர்க்கவேண்டும். இப் பருவத் தில் நசுக்கப் பெறுவதேைலா அன்றி, கவனக் குறைவினலோ சிறுவர்கள் விடுப்பூக்கத்தை இழக்கும்படி நேரிட்டால், பிற்காலத்தில் அவர்களின் அறிவு வளர்ச்சி தடைப்படும்; புதுப்போக்குடைமையும் அறிவு நாட்ட மும் இல்லாது போய்விடும். இப் பருவத்தில் சிறுவர்கள் பிற பிள்ளைகளுடன் கூடிக் குலாவுவதில் ஆர்வங்காட்டுகின்றனர். முன் பருவத்தைப்போல் சிறுவன் தன்னங். தனியனுக விளையாட விரும்புவதில்லை; பிற சிறர்களுடன் சேர்ந்தே விளையாடுகின்ருன்; பலருடன் சேர்ந்து ஒரு குழுவாக இணைந்து விடு: கின்றன். பெரும்பாலும் ஒரே பாலச் சார்ந்த சிறுவர்களே இக் குழுக்கன் அமைத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு குழுவிற்கும் தலைவன் ஒருவனே இருப்பான் ; பெரும்பாலும் தற்சாதிப்பும் உடல் வன்மையும் மிக்குள்ள வனே தலைவனுக அமைவான். இப் பருவத்திலுள்ள சிறுவர்கள் தம் சொல்லைக் கேட்பதில்லை யென்றும், சதா விளையாடச் சென்று விடுகின்ற னர் என்றும் பெரும்பாலான பெற்றேர்கள் குறை கூறுவதை நாம் அறி யாமலில்லை. இவ்வாறு அவர்கள் எண்ணுவதும் குறை கூறுவதும் தவறு. இப்பொழுதுதான் குழந்தைகள் வெளியுலகைப்பற்றித் தெரிந்துகொள்ள விழைகின்றனர் என்பதை அவர்கள் அறியவேண்டும். வெளிச்சிறர் களுடன் கூடி விளையாடுவதால் சிறுவர்களிடம் சமூக சம்பந்தமான சில. பண்புகள் அமைகின்றன. தலைவனுக்குக் கீழ்ப்படிதல், குழுவின் நம்பிக் 85lgún Gurrá ejemL soto - originality:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/130&oldid=777767" இலிருந்து மீள்விக்கப்பட்டது