பக்கம்:கல்வி உளவியல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கல்வி உளவியல் கைக்குப் பாத்திரமாதல் போன்ற குணங்கள் அவர்களிடம் வளர்கின்றன. சிலசமயம் சில தகவல்களைத் தலைமையாசிரியருக்குத் தருவதற்குக்கூட சிறுவர்கள் மறுப்பர் ; ஒரு நண்பனேக் காப்பாற்றுவதற்காகவோ அல்லது தாம் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒழுக்க நெறிகளின் பொருட்டோ இவ் வாறு செய்யக் கூடும். இங்கிலையில் பள்ளி ஆட்சியினர் அவர்களைப் பாராட்டவேண்டுமேயன்றி அவர்களைத் தண்டிக்கக் கூடாது. விரும்பத் தகாத நடத்தையுள்ளபொழுது அவர்களை நுட்பமாகக் கையாண்டு அதனை நாசூக்காகக் களைய முற்படவேண்டும். ஏதாவது கட்டாயப்படுத் தித் தொல்லை தந்தால், அந் நடத்தை அவர்களிடம் கிரந்தரமாகவே படிந்துவிடும். சாரணர் இயக்கம், குடிமைப்பயிற்சி, இலக்கியக் கழகங்கள் போன்ற வற்றையும், குழுவாக இணைந்து செயலாற்றும் பிறவற்றையும் அமைத்து அவர்களைச் செயலாற்றத் துண்டவேண்டும். தம் வேலையைத் தாமே திற ணுவும் திறனைப் பெற்றிருப்பதால், சில சிறிய பொறுப்புக்களைத் தரலாம். தன்னம்பிக்கை நன்முறையில் ஏற்படுகின்றது. குழுவுணர்ச்சி சிறந்தோங் கிக் காணப்பெறுகின்றது. தக்கமுறையில் இக்குழு உணர்ச்சிக்கு வேலை தராவிடில் அது பெருங் கேட்டில் கொண்டுசெலுத்திவிடும். பல்வேறு விளையாட்டுக்கள், விளையாட்டுப் போட்டிகள், களியாட்டங்கள், நாடகங் கள் முதலியவை இப் பருவச் சிறுவர்களுக்கு மிகவும் ஏற்றவை. இப் பருவச் சிறுவர்களிடம் காணும் இன்னெரு சிறப்பியல்பு படிப்பில்87ஆர்வங்காட்டுதல் ஆகும். எத்தனைப் புத்தகங்களைக் கொடுத் தாலும் அவற்றை விரைவில் படித்து முடித்துவிடுவர். தாய்மொழிக்குச் சிறிதளவு ஏற்றங் கொடுத்திருப்பதால் இப்பொழுதுதான் பல நூல்கள் வெளி வருகின்றன. நம் காட்டைப் பொறுத்த மட்டிலும் இந் நூல்களே யெல்லாம் சிறுவர்கள் வாங்கும் கிலேயில் இல்லை ; பெற்றேர்களின் வறுமை கிலேயே இதற்கு முதற் காரணமாகும். பள்ளிகள்தாம் ஓரளவு கல்ல புத்தகங்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிவைத்துப் படிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருதல் வேண்டும். இப் பருவத்தில் படிப்பில் சுவை வளர்த்தலிலும் திறனை வளர்த்தலிலும் ஆசிரியர்கள் கவனமாக இருத்தல் வேண்டும். இப் பருவத்தில்தான் சிறுவர்களிடம் வீர-வழிபாடு* தலைகாட்டு கின்றது. இவர்தான் மிகவும் விரும்பத்தக்கவர் என்று ஒரு குறிப்பிட்ட

  • “gữ đư-#ìpsÐiủgểô - self-criticism. 87uụ ữu - reading. 38 s#g-8ưự}u tr($ - hero-worship.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/131&oldid=777770" இலிருந்து மீள்விக்கப்பட்டது