பக்கம்:கல்வி உளவியல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 11 I கும் எங்காட்டிற்கும் உரிய சிறந்த உலக இலக்கியங்களில் சுவைதோன்று மாறு ஊக்குவது நலம் பயக்கும். இப் பருவத்தில் பகுத்தறிவு வளர்கின்றது. மன உறுதி, அடக்கியாளும் விருப்பம், உலகுடனும் கடவுட் கொள்கையுடனும் நன்கு வாழ்தல் ஆகிய வற்றில் நோக்கம் ஏற்படலாம். தன்னையடக்கும் ஆற்றல், எண்ணித் துணிதல் முதலியவற்றை மேற்கொள்ளுதல், உயரிய நோக்கம், நன்விருப் பப்படி கடக்க ஊக்கம், உறுதியான அறிவு, கன்னடத்தை இவை முக்கிய மானவை. துயதை அறிந்து அதன்படி கல்லொழுக்கத்தை மேற்கொள் ளுதல், சமயப்பற்று இவையும் வளரவேண்டும். இவற்றைப்பற்றி எடுத் துரைப்பதைவிட நடந்து காட்டல் வேண்டும். மேலும் கீழ்ப்படியாமை, தன்னை மிகமுக்கியமாக நினைத்தல், பிறர் தன்னைப்பாராட்ட விரும்புதல், மடிமை, ஊக்கமின்மை ஆகியவையும் இப் பருவத்தில் காணப்பெறலாம். பெற்ருேர் விழிப்பாக இராவிடில் குற்றச் செயல்கள், தீய நடத்தை முதலானவை தோன்ற ஏதுவுண்டு. சமூக முன்னேற்றம் : இப் பருவத்தில் சமூக மனப்பான்மையும் புத்துயிர் பெறுகின்றது. குடும்பம், பள்ளி இவைகளைவிட பரந்த சமூகம் ஒன்றின் உறுப்பினர் என்று இப் பருவத்தினர் உணர்கின்றனர். புதிய ஊக்கங்களும், உறவுகளும், கோக்கங்களும் ஏற்படுகின்றன. சமூகத்தை காடுதல், தம்மையொத்த வயதினருடன் சேரவிரும்புதல், கழகம் அமைத் தல், சமூகத்திற்காகத் தன்னை ஒடுக்கிக் கொள்ளுதல், சமூகத்திற்கும் சங்கத்திற்கும் பாடுபடுதல் ஆகியவை யாவும் தலைமை, நட்பு, பொறுப்பு, ஒத்துழைப்பு, தியாகம் ஆகியவற்றை வளர்க்கும். ஒத்துழைக்க விரும்பு வதையும், பிறருக்குழைப்பதையும், பிறருடன் கூடிவாழ முன்வருவதை யும் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்த வகையறியாமல் இவற்றை வீணே விட்டால் இவை நெறிபிறழ்வான நடத்தைகளில் கொண்டுசெலுத்திவிடும். நன்கு பயன்படுத்தில்ை சிறந்த பயனை அடையலாம். பெற்ருேர்கள் தக்கவர்களின் சேர்க்கையை உண்டாக்கிக் கூடாநட்பை விலக்குதல் வேண்டும். உடல்மாறுபாடுகளால் எழும் உளவிளைவுகள்: பெரும்பாலும் இவ் விளைவுகள் உள்ளக்கிளர்ச்சிகளைப்பற்றியவை. அவை முதிர்ச்சிபெறும் பாலுணர்ச்சியுடன் ஓரளவு தொடர்பு கொண்டவை. இப் பருவத்தில் எழும் உள்ளக்கிளர்ச்சிகள் பெரும்பாலும் உறுதியற்று இருக்கும்; ஆல்ை, அவை வலியுற்றுக் கிளர்ந்தெழும். மகிழ்ச்சி, பாலுணர்ச்சி, அச்சம், சினம், பொருமை, பேரவா ஆகிய இவை பொங்கியெழுந்து ஒன்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/134&oldid=777779" இலிருந்து மீள்விக்கப்பட்டது