பக்கம்:கல்வி உளவியல்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 113 யும் ஆண்மையையும் பெறுவதில் ஊக்கங்கொண்டு பலவகை விளையாட் டுக்கள், போட்டிப்பந்தயங்கள், வேலைகள் ஆகியவற்றில் ஈடுபடுகின்ருன். அதல்ை தொழில் புரிகிற திறமையும் செம்மையும் மிகுகின்றன. ஆத லால்தான் பள்ளிகளில் நற்பயன் விளக்கும் பலவகைவேலைகள், விள்ை யாட்டுக்கள், சாரணர் இயக்கம், குடிமைப்பயிற்சி, மகிழ்ச்சிச்செலவு முதலியவைகளில் சிறுவர்சிறுமியரைக் கலந்து கொள்ளுமாறு செய்கின் றனர். ஆயினும், அளவுக்கு மீறின வேலையளிப்பது தீங்கு பயக்கும். போதிய அளவு ஓய்வு, நல்ல உணவு, சுகாதாரம் இவை தேவையாகும். மகளிரிடத்திலும் இத்தன்னுணர்வு தோன்றி, உடலைப்பற்றிய ஊக்கம் ஓரளவு காணப்படும். அவர்கள் தங்கள் உடல் தோற்றத்தில் மிக்க கவனம் செலுத்துவர். உடல் நலத்தையும் உடலழகையும் வளர்க்கு மெனத் தாங்கள் கருதும் உடற் பயிற்சிகள் அவர்களது மனத்தைக் கவரும். வடிவழகிலும் ஆடையிலும் அவர்கள் காட்டும் கவனத்தைப் பெற்ருேர் உள்ளவாறு உணர்தல் இன்றியமையாததாகும். தங்களுடைய பெண் மணிக்கணக்கில் கண்ணுடியின் முன் நிற்பதைக் கொண்டு அவள் கெட்டுவிட்டாள் என்று கருதுதல் ஆகாது. உதடுகளுக்கு நிறமூட்டி, இரு சடைகள் போட்டு ஆடையணி முதலியவற்ருல் பகட்டுச் செய்து கொள்ளுதலோ அல்லது அதற்கு நேர்மாருன, காகரிகமற்ற முறையில் ஆடையணிந்து இருத்தலோ இவ்விரண்டும் தவிர்க்கவேண்டியவை யாகும். விருந்து, விழாபோன்ற நாட்களுக்குத் தகுந்த ஆடைகள் தனக்கு இல்லையென்ருே, மற்றப்பெண்கள் அணிந்திருக்கும் ஆடைகளைப் போல் தனக்கு இல்லையென்ருே ஒரு பெண் வருந்தக்கூடும். இளைஞனும் இப் பருவத்தில் தன் தோற்றத்தில் கவனம் செலுத்தக் கூடும். குறுகிவிட்ட கால்சட்டைகளே அணிய மறுப்பான். அவ்வாறு அணிந்து கொண்டு வெளியில் செல்ல நேரும்போது வருந்துவான். மற்ற இளைஞர்கள் உயர்ந்த ஆடை அணிந்திருக்கையில் தான் மட்டிலும் அல் வாறு அணியவில்லையே என்று துயரப்படுவான். இதனைப் பெரியவர்கள் பரிவோடு கவனிக்க வேண்டும். கல்வி நிலையங்களில் எல்லோரும் ஒரேவகையான ஆடையணியக் செய்யும் கட்டுப்பாடு இவ்வகையான ஏக்கங்களைத் தவிர்ப்பதுமன்றி, எளிய பெற்றேர்க்குத் துணையாகவும் இருக்கும். ஆசிரியர், பெற்ருேர் பொறுப்பு : இந்த நெருக்கடியான பருவத் தினரிடம் ஆசிரியரும் பெற்றேரும் அறிவுடன் கூடிய ஒத்துணர்ச்சியைக் காண்பிக்க வேண்டும். தங்கள் குமரப் பருவ வளர்ச்சிகளையும் செயல் க.உ.8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/136&oldid=777783" இலிருந்து மீள்விக்கப்பட்டது