பக்கம்:கல்வி உளவியல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 115 நல்கிப்பொருத்தமுற உதவுதல் மூத்தோர் கடமையாகும். எவ்விதத் திலும் இளைஞர்களின் தன்மதிப்புக்குக் குறைவான முறையில் மூத்தோர் கடந்துகொள்ளுதல் ஆகாது. குழந்தைகளை உற்றுநோக்கும் முறைகள் பயிற்றுதல் திறம்பட அமைய வேண்டுமானல், பயிற்றும் பொருளை யும் பயிற்றப்பெறும் குழந்தையையும் நன்கு அறிதல் வேண்டும் என்பது இன்றைய உளவியல் நமக்கு உணர்த்துவது. குழந்தைகளைப்பற்றி நூல் களும் அறிஞர்களும் எடுத்துக் கூறுபவை ஓரளவு வழிகாட்டிகளாகவே பயன்படும் , ஆசிரியர்களே குழந்தைகளை உற்றுநோக்கி எழுதி வைக்கும் குறிப்புக்களே நன்கு பயன்படும். நூலில் கூறப்பெறுபவையும் அறிஞர்கள் உரைப்பவையும் சரியா என்பதையும் சோதிக்கலாம். சரியாக இருப்பின் கொள்ளலாம்; இல்லாதவற்றைத் தள்ளலாம். குழந்தைகளை உற்று நோக்கும் ஆசிரியர்கள் குழந்தைகள்பால் அன் புடையவர்களாக இருக்க வேண்டும். குழந்தைகளைத் தனித்தனியாகவும் குழுக்களிலும் கவனிக்க வேண்டும். பாட நேரம், விளையாடுமிடம், ஓய்வு நேரம், தோட்டம், பூங்கா, கடை, கோவில், வீடு, தெரு, குளக்கரை, காடகக் கொட்டகை, படக் காட்சி, மகிழ்ச்சிச் செலவு போன்ற பலசூழ் கில்ேகளிலும் குழந்தைகளை உற்று நோக்குதல் வேண்டும். குழந்தைகள் உடல்நிலை, அறிவுநிலை, உள்ளக்கிளர்ச்சி நிலை, சமூகப்பண்புநிலை போன்ற பல கூறுகளை உடையவர்களாதலின், அவையனைத்தையும் அவற்றின் வளர்ச்சிப்படிகளையும் உற்று நோக்க வேண்டும். அவ்வப்பொழுது குறிப் புக்கள் எழுதி வைத்துக் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது. சிறப்பாகக் குழந்தைகள் தாமாகக் கட்டுப்பாடின்றிப் பழகும் இடங்களில் அவர்களை உற்று நோக்கல் வேண்டும். அவர்களிடம் அன் பாகவும் பரிவாகவும் பழகி மிக விநயமாக நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் செயல்களிலும் விளையாட்டுக்களிலும் தலையிடாமல் தற்செய லாகக் கவனிக்க வேண்டும். அறிவியல் சோதனைகளில் குறிப்புக்கள் எழுதுவதுபோல் நடந்ததை நடந்தபடியே எழுதுதல் வேண்டும். இங்குச் சொந்தக் கருத்திற்கே இடமில்லை. ஏனைய ஆசிரியர்களுடனும் குழந்தை களப்பற்றி உரையாடுதல் பெரும் பயன் தரும். உற்று நோக்கலில் இருமுறைகள் உள. ஒன்று: ஒரே குழந்தையை ண்ேட காலம் உற்று நோக்கி அவனிடம் புதிய நடத்தைகளும் கவர்ச்சி களும் தோன்றும் காலம், அவை வளரும் விரைவு, பழைய நடத்தை களும் கவர்ச்சிகளும் மறையும் காலம் முதலியவற்றைக் கவனித்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/138&oldid=777788" இலிருந்து மீள்விக்கப்பட்டது