பக்கம்:கல்வி உளவியல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. குடிவழியும் சூழ்நிலையும் குழந்தையைப்பற்றிய ஆராய்ச்சியிலும் அவர்கள் கல்வியிலும் எழும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று குடிவழி, சூழ்நிலை ஆகியவை பெறும் பங்கு ஆகும். இதில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. ஒரு சாரார், குழந்தைகளின் வளர்ச்சி, ஒழுக்கம் நடத்தை முதலியவை அவர்கள் பெற் ருேளிடமிருந்தும் மூதாதையரிடமிருந்தும் பெறும் கிலேயான சில கூறு களால் முற்றிலும் அறுதியிடப் பெறுகின்றன் என்று கூறுவர்; அவற்றை எவ்வாற்ருனும் அசைக்க முடியாதென்று வாதிப்பர். பிறிதொரு சாரார் அவை யாவும் குழந்தைகள் சூழ்நிலையில் பெறும் வாய்ப்புக்களைப் பொறுத் தவை என்று சாற்றுவர் ; சூழ்நிலையினுல் அனைத்தையும் கைவரச் செய்யக் கூடும் என்று சாதிப்பர். இங்ங்ணம் குடிவழிக்கும் சூழ்நிலைக்கும்இயற்கைக்கும் வளர்ப்புக்கும்.*-இடையே நடைபெற்றுவரும் எதிர் வழக்கில் இரு சாரார் கூறும் காரணங்களையும் சிறிது ஆராய்வோம். 'குடிவழி’க் கட்சியினர் கூறுவது : குடிவழியென்பது ஒரு குழந்தை தன் முன்னேர்களிடமிருந்து பெறும் மெய்ப்பண்புகளும் மனப்பண்பு களும் ஆகும். இதல்ை குழந்தை உடல் அமைப்பில் தந்தையைப்போ -லிருப்பதன்றி, விருப்புக்களிலும் வெறுப்புக்களிலும், திறன்களிலும் அறி திறனிலும்", பழக்கங்களிலும் ஒழுக்கத்திலும்கூட தந்தையை ஒத்திருக் கின்றது என்பர். தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை”, மகனு ரைக்கும் தந்தை நலத்தை தந்தையர் ஒப்பர் மக்கள் ' என்ற கூற்றுக் களையும் சான்றுகளாகக் காட்டுவர். பிறவிவழியாக வரும் இந்த இயல்பே குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கினைப் பெறுகிறதென்றும், அதுவே குழந்தைபெறும் கல்வியின் சாத்தியக் கூறுகளே அறுதியிடுகின் றது என்றும் கூறுவர். எனவே, குழந்தை தன் பெற்றேர்களிடமிருந்து + (59.61%l- heredity. 2 & 3 flá) - environment. 8இயற்கை - nature. 4 susir fi ủų – nurture. 5 srstir sigả S - controversy. 8 flypsir - ability, 7 gól#psir – intelligence.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/147&oldid=777808" இலிருந்து மீள்விக்கப்பட்டது