பக்கம்:கல்வி உளவியல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்கிலேயும் 125, பெறும் சில திறன்களும் கவர்ச்சிகளும் அதன் கல்வியை வரம்புகட்டி விடுகின்றன என்றும், அவை மலரும் தன்மையும் நெறியும் அக்குழந்தை வாழும் சூழ்நிலையால் எஞ்ஞான்றும் செல்வாக்குப் பெறுவதில்லை என்றும் பகர்வர். இவ்வாறு குடிவழிக்குத் தரும் முக்கியத்துவத்தால் குழந்தைக் கல்வியில் சூழ்நிலையைப் பற்றிய எண்ணம், முயற்சி, வருந்தியுழைக்கும். கட்டுப்பாடு ஆகியவை யாவும் பயனற்றவை எனக் கருதுவதாக முடிகின் றது. அவர்கள் பாபர், சிவாஜி, இரஞ்சிட்சிங் போன்றவர்களை எடுத்துக் காட்டி அவர்கள் எவ்வளவு விடாமுயற்சியுடன் தமது வாழ்க்கையில் நேரிட்ட எதிரான சூழ்நிலையை எவ்வாறு சமாளித்தனர் என்றும், தம். முடைய சூழ்நிலையில் ஊக்கம் கொடுக்கும் சக்திகளை எவ்வாறு முறியடித் தனர் என்றும், தாம் செல்லும் வழியில் கடுமையான தடைகளும் தொல்லை களும் இருந்தபோதிலும் எவ்வாறு ஆட்சிபீடத்தைக் கைப்பற்றிச் சிறப்புற். றனர் என்றும் சான்றுகளை ஒன்றுக்கு மேலொன்ருக அடுக்குவர். ஆயிரக், கணக்கான இளைஞர்கள் இம்மாதிரியான சூழ்நிலையில் இருக்கத்தான் செய்கின்றனர்; ஆல்ை அவர்கள் யாவரும் உற்சாகத்துடன் செயலாற்று. வதுமில்லை; அப்படி ஆற்றிலுைம் தோல்வியையே அடைகின்றனர். ஒரு. சிலர் மட்டிலும் இங்ங்ணம் அருஞ்செயல்களின் சிகரங்களைக் காண்பதற் கும் பிற சிறப்புக்களை எய்துவதற்கும் காரணம், அவர்கள் பிறவியுடன் பெற்ற இயல்பும் மேதைத் தன்மையுமே ஆகும். எனவே, குடிவழியாகப் பெறும் பண்புக் கூறுகளும், பிறவியிலே யமைந்த இயற்கைப்பேறுமே ஒரு குழந்தையின் ஒழுக்கம், நடத்தை, ஆளுமை ஆகியவற்றை இறுதி யாக அறுதியிடுகின்றன என்று வ்ற்புறுத்துவர். விரையொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா' என்பது இவர்கள் விடுக்கும் வின. இதைச் சரியென ஒப்புக்கொண்டால் பள்ளியும் ஆசிரியரும் வீண் என்று கொள்ளவேண்டியதாக முடியும். சூழ்நிலைக் கட்சியினர் கூறுவது : உளவியல் முறைப்படி சூழ்நிலை என்பது ஒருவன் கருவாகியது முதல் காலன் கவ்வும் வரை பெற்றுள்ள தொகுதிகளாகும். உணவு, வளர்க்கும் முறை, கல்வி, உலக அனுபவம் முதலியன எல்லாம் இதனுள் அடங்கும். சுரப்பிகளால் ஏற்படும் மாறு தல்களைக்கூடச் சிலர் சூழ்நிலையுடன் சேர்த்துப் பேசுவர். சூழ்நிலையைப் பற்றிய இக் கூறிய கருத்து செயல்திறன் வாய்ந்தது. ஒரு பொருள் முன்னே நிற்பதால் மாத்திரம் சூழ்நிலையாகிவிட முடியாது. அஃது ஒரு வரைத் தூண்டினுல்தான் சூழ்நிலையாகும். அஃதாவது, தனியாளின் உட லுக்குப் புறம்பேயுள்ள, ஆல்ை அவரது புலன்களின் எல்லைக்குள் இருக் ேேமதைத் தன்ெைgenitis. பண்புக் கூறு- trait.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/148&oldid=777810" இலிருந்து மீள்விக்கப்பட்டது