பக்கம்:கல்வி உளவியல்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கல்வி உளவியல் கும், எல்லாப் பொருள்களும் விசைகளும் அடங்கிய தொகுதியே சூழ்நிலை என்பது. இவ் விலக்கணம் சூழ்நிலையைப்பற்றிப் பொதுமக்கள் கொண் டுள்ள கருத்தைவிட மிகப் பரந்தது. வாழ்க்கைச் சுழற்சியிலுள்ள எவ் வகைத் தூண்டல்களும் இதனுள் அடங்குகின்றன. ஒரு மானிடக் குழந்தை பல்வேறு சாத்தியக் கூறுகளுடன் பிறக் கின்றது என்றும், அது மனிதத்திறன் எல்லேக்குள் அடங்கிய எந்தவித மான துலங்கலுக்கும் உட்படக்கூடியது என்றும் சூழ்நிலைக் கட்சியினர் கூறுகின்றனர். சாதகமான வாய்ப்புக்கள் இருப்பின், மனிதன் இது காறும் சாதித்ததை யெல்லாம் ஒருவன் சாதிக்க முடியும். மேதைத் தன்மை என்பது முட்டாள்தனத்தைப் போலவே சூழ்நிலையின் விளைவே யாகும். குழந்தையின் மனம் களிமண்ணப் போன்றது ; சூழ்நிலை அதற்கு எந்த வடிவத்தை வேண்டுமானலும் அமைக்கலாம். லாக்கே என்பார் கருத்துப்படி அதனை ஒரு தூய்மையான கற்பலகைக்கு ஒப்பிடலாம் : அனு பவங்கள் யாவும் அதில் பதிகின்றன. இக் கட்சியினர் பாபர், சிவாஜி முதலியோரின் எடுத்துக்காட்டுக்களில் அவருடைய முன்னேர்களும் வழித்தோன்றல்களும் ஏன் அவர்களைப்போல் அருஞ்செயல்களையும் திற மைகளையும் காட்டவில்லை என்று வினவுகின்றனர். இவர்கள் யாவரும் அவர்கள் வாழ்ந்த காலத்திலுள்ள சமூக, பொருளாதார, அரசியல் செல் வாக்குகளால் தாக்குண்டவர்கள் , அவர்கள் வாழ்க்கை வேறுவிதமாகப் போயிருந்தால் அங்ங்ணம் அவர்கள் திகழ்ந்திருத்தல் முடியாது. சூழ் கிலே, பயிற்சி, கல்வி ஆகியவை மனிதனை எங்ங்னம் ஆக்குகின்றனவோ அங்ங்னமே அவன் வளர்கின்ருன் என்பது இவர்கள் கூறும் வாதமாகும். ஆகவே, கல்வி என்பது ஒருவரது உள, ஒழுக்கச் செயல்களின் திரட்சியாகும். ஒரு காலத்தில் காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன் பெரும் புகழ்வாய்ந்த பண்பாடு, கலை, அறிவியல், மெய்ப்பொருளியல், சமயம், சமூகம்போன்ற துறைகளை அனுபவத்தாலும், கற்றலாலும், கல்வி யாலும் பயிற்சியாலுமே வளர்த்துள்ளான் என்பதற்கு நாகரிகத்தின் வர லாறே சான்ருக கிற்கின்றது. அவனுடைய கற்பேற்றிற்குக் குடிவழியே முதற்காரணமாக இருந்திருந்தால் அவன் இருபது நூற்ருண்டுகட்கு முன்னிருந்த நிலையிலேயே இருந்திருக்கவேண்டும். மேலும், வாழ்க்கை யில் பழிகளைச்செய்து பாழாகப் போனவர்களும், தக்க ஏற்பாடுகளாலும் வழியமைப்புக்களாலும் புதிய முறையில் வாழ்க்கையைத் தொடங்கி நன்னிலையை எய்தியிருக்கின்றனர் என்பதற்கும் பல சான்றுகள் இல்லா iosomáðs- Locke. 115 poul - talent. 12 off Gug - fortune.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/149&oldid=777813" இலிருந்து மீள்விக்கப்பட்டது