பக்கம்:கல்வி உளவியல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

хviii நூல்.முகம் யாரே என்றுதான் சொல்லவேண்டும். தோன்றுவித்த நாள் தொட்டு அதனை உயர்ந்த முறையில் கண்காணித்தும் வளர்த்தும் வருபவர். இத்தகைய கல்வித்துறை அறிஞருக்கு அரசியலிலும் பங்கு இல்லாமல் இல்லை. முன்னுள், தில்லி பாராளுமன்ற உறுப்பினர்; இன்று சென்னை மாநில அரசின் மேல்சட்டசபைக்கு ஆசிரியர் தொகுதியில் உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றவர். பல தொழிற்சாலைகளின் இயக்குக ராகவும், அனைத்திந்தியத் தொழிற்கல்வி ஆலோசனைக் குழுவின் உறுப் பினராகவும், பல்லாண்டுகளாகச் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு(Syndicate) உறுப்பினராகவும் இன்னும் வேறு பல உயர்ந்த நிறு வனங்களில் உறுப்பினராகவும் இருந்து பணியாற்றி வருபவர். பல்லாண்டுகளாக இவர் ஆற்றிவரும் தமிழ்த் தொண்டினத் தமிழ் கூறு கல்லுலகம் நன்கு அறியும். பன்னிரண்டு யாண்டுகட்குமேல் தமிழ் மக்களிடையே பெருமிதத்துடன் உலவிவரும் கலைக்கதிர் என்ற அறி வியல் திங்கள் இதழின் ஆசிரியராகப் பணியாற்றித் தமிழன்னைக்குப் புதிய அணிகளைப் பூட்டி மகிழ்பவர். இவரது ஆராத தமிழ்க்காதலையும் பற்றற்ற தமிழ்த் தொண்டினையும் பொறியியல் ஆராய்ச்சித் திறனையும் கண்ட சென்னை மாநில அரசு இவரைக் கல்லூரித் தமிழ்க் குழுவின் தலைவ ராக்கியது. அதன் தலைவராக இருந்துகொண்டு தமிழைக் கல்லூரி களிலும் பாட மொழியாக ஆக்கும் ஆக்கத் துறைகளில் அல்லும் பகலும் உழைத்து வருவதை யாவரும் அறிவர். தமிழன்னையைக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகத்திலும் அரியணை ஏற்றுவிக்கும் இத்தகைய அறிஞர், என் சிற்றறிவிற்கு எட்டிய வரை சிறிய அளவில் தமிழன்னைக்குப் புத் தணிகளைப் பூட்டி மகிழும் சிறியேனது இந்தச் சிறு நூலுக்கு அணிந்துரை அருளி எனக்கு ஆசிகூறியதைக் கிடைத்தற்கரிய பேருகக் கருதுகின் றேன். இப்பெரியாரின் ஆசியால் இத்துறையில் என் சிறு பணியும் சிறக்கும் என்ற நம்பிக்கை உண்டு. ஆசிசுடறிய அறிஞருக்கு என் உளங்களிக்த கன்றி என்றும் உரியது. டாக்டர், த. ஆ. புருடோத்தம்அவர்கள் கல்வித்துறையில் ஒரு 'ஜாம்பவான்’; ஒரு பழுத்த மேதை முதுபெரும் புலவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பதிஞேர் யாண்டுகளும், ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் பத்தாண்டுகளும், மைசூர்ப் பல்கலைக் கழகத்தில் பன்னிரண்டு யாண்டுகளும் பணியாற்றி 1955-லிருந்து திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் மெய்ப்பொருளியற் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்ருர், கடந்த மூன்ருண்டுகளாகப் பல்கலைக் கழகக் கல்லூரி முதல்வராகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/15&oldid=777815" இலிருந்து மீள்விக்கப்பட்டது