பக்கம்:கல்வி உளவியல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 127 மல் இல்லை. எனவே, சூழ்நிலையே ஒரு மனிதனை ஆக்குகின்றது அல்லது அழிக்கின்றது ; குடிவழி என்பது கணக்கிற்கு எடுத்துக்கொள்ள வேண்டாத கிழலாகி விடுகின்றது. இரண்டு கருத்துக்களும் கல்வியில் செல்வாக்குப் பெற்றிருத்தல்: இரு வேறு துருவ எல்லைகளிலுள்ள இந்த இரண்டு கருத்துக்களும் பொது மக்களிடையே வேரூன்றியிருக்கின்றன. இக் கருத்துக்கள் கல்வியைப் பற்றிய ஆசிரியர்களின் மனப்போக்கையும் அறுதியிடுவதால், அவர்கள் குடிவழி, சூழ்நிலை ஆகிய இரண்டைப்பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள் ளுதல் இன்றியமையாததாகின்றது. குடிவழியே சிறந்ததெனக் கருது வோர் கல்வியைக் கைவிடுகின்றனர்; அதனை அறவே புறக்கணிக்கின் றனர். தாம் எதிர்பார்த்ததற்கு மாருகக் குழந்தைகள் காணப்பெறினும், அவர்களிடம் கற்பழக்கங்களை உண்டாக்கவேண்டும் என்கிற தம்முயற்சி தவறிப்போயினும், அவர்கள் சூழ்கிலேயே அக் குழந்தைகளின் ஒழுக்கம், கற்றல், கடத்தை ஆகியவற்றை முன்னரே அறுதியிட்டிருக்கின்றது என் றும், வரக்கூடிய முடிவை மாற்ற முயல்வது வீண் என்றும் பழம்பாட் டையே பாடுகின்றனர். அவர்கள் தம்மிடம் பயிலும் மாளுக்கர்களின் மேம்பாட்டில்’ நம்பிக்கை இழக்கின்றனர்; அவர்கள் வகுப்புப் போதனை யில் ஏதாவது பெற்றுத் தொலையட்டும் என்று வாளா இருந்து விடுகின் றனர். சில ஆசிரியர்கள் அவர்கள் தம் வகுப்பின் நிலையையே குறைத்து விடுகின்றனர் என்ற குறையையும் கூறி, ‘அவரை போட்டால் துவரை முளைக்காது என்பது உறுதி என்ற சமாதானமும் கூறுகின்றனர். அவரை போட்டால் துவரை முளைக்காது என்பது உண்மைதான். ஆனல் தக்க முறையில் சூழ்நிலையைக் கவனித்தால் சிறந்த அவரையையே உண்டாக் குதல் முடியும் ; தக்கவாறு கவனித்தால் துவரை விளைச்சலையும் அதிகரிக் கச்செய்தல் இயலும், மாளுக்கர்களின் இயல்புகள் வெவ்வேருக இருக் கின்றன என்பதும், அவற்றின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட திட்டமான போக்கிலேயே வளர்கின்றன என்பதும் உண்மையே; ஆல்ை, அப்போக் கில் வளர்ச்சி பெறுவதில் மேம்பாடு அடையச் செய்வதும் குடிவழிவந்த முதலைச் சிறந்த முறையில் கையாளுவதும் நம் கையில்தான் இருக் கின்றன. கவனமாக எருவிடுதல், புலத்தைத் தக்க முறையில் பண்படுத் தல், நீர்ப்பாய்ச்சும் முறை போன்ற அறிவியல் முறைச் சாகுபடியால் விதைகள் செழித்து வளர்கின்றன ; உயர்ந்த பலனையும் தருகின்றன. குடிவழி அறுதியிட்டிருக்கும் எல்லைக்கு மீறிய செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது வீணே;ஆல்ை, குழந்தைகள் குடிவழிப் பெற்ற திறன்களை is Globust Q - improvement. 14 §30 - standard.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/150&oldid=777817" இலிருந்து மீள்விக்கப்பட்டது