பக்கம்:கல்வி உளவியல்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 129 உண்மைநிலை : மேற்கூறிய இருவேறு கருத்துக்களும் குடிவழியை யும் சூழ்நிலையையும் ஒன்ருேடொன்று முரண்பட்ட விசைகள் என்ற தவருண முடிவுகளைக் கொண்டவை. அவை விசைகளுமல்ல ; தம்முள் தாம் முரணியவையும் அன்று. குடிவழி வன்மையுடையதா சூழ்நிலை வன்மையுடையதா என்பது பிரச்சினை அன்று. இந்த இரண்டு சொற் ருெடர்கள் குறிக்கும் வாழ்க்கையின் இரண்டு கூறுகளும் பிரிக்க முடியா தவை ; பிணைந்து நிற்பவை. ஒன்றைப் புறக்கணித்தால் மற்ருென்றுக் குப் பொருளே இல்லை. முதலில் நாம் அறிந்து கொள்ளவேண்டுவது யாதெனில், அத்தகைய ஆயப்படுபொருள்:-பிரச்சினைக9-இல்லை என்பதே. வளரும் ஒவ்வொரு உயிரியும்-தாவரம், பிராணி, மனிதன் ஆகியவற்றுள் எதுவாயினும்-குடிவழியும் அல்ல ; அல்லது சூழ்நிலை யும் அல்ல; அது குடிவழியும் சூழ்நிலையும் கலந்ததொன்று. அது விடு தலையுடன் இயங்கும் படைப்புச் செயல்; அது தானே உருவாகி தாளுக வளர்வது. அது வளர்வதற்குக் காரணம் குடிவழியாகப்பெற்ற இயல் பான திறனும் சூழ்நிலையுமே. அது வளர்வதற்குக் குடிவழியும் சூழ்நிலையும் இணைந்து செல்வதுடன் இடைவினையும் புரிகின்றன. எனவே, கல்விக் கும் சமூகத்திற்கும் முன்னிற்கும் பிரச்சினை வாழ்க்கையின் இந்த இரு கூறுகளில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்பது அன்று ; ஒவ்வொரு குழந்தைக்கும் எந்த அளவுக்குச் சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க முடியும் என்பதே. இதல்ை அக் குழந்தை குடிவழிப்பெற்ற தன்னுடைய இயற்கைப் பேறு முழுவதிலும் அமைந்து கிடக்கும் மதிப்பு அனைத்தை யும் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. இதுவே குடியரசு நாடுகளின் முக்கிய பொறுப்பு என்பதை நாம் மறத்தலாகாது. ஒரு தாவரத்தின் வளர்ச்சியில் விரையின்' பங்கையும் மண்ணின் 1.8 பங்கையும் அறிந்தால் குடிவழிக்கும் சூழ்நிலைக்கும் உள்ள உறவுமுறை தெளிவாகும். விரையினுள் அது ஒருவகைத் தாவரமாக வளரும் ஆற்றல் அடங்கியிருக்கின்றது; அது கல்முறையில் வளர்வதும் நன்றல் லாத முறையில் வளர்வதும் அது அடையும் மண்ணப் பொறுத்திருக்கின் றது. அது பாறையில் விழுந்தாலும் வெயிலில் விழுந்து நசுக்குண்டா லும் முளைப்பதில்லை. அது அதிகமான நீருள்ள அல்லது வறட்சியை யுடைய வளமற்ற மண்ணில் விழுந்தால் முளைக்கும்; ஆனால் நீண்ட 1.க ஆயப்படு பொருள் issue. பிேரச்சினை - problem. விசை-வித்து. விரை - மணம் : மணத்தைத் தரும் பூவிலுள்ள பொடி ; இதுதான் தாவரத்தின் ஆண் உயிரணு; இதுவே முட்டையுடன் சேர்ந்து வித்து ஆகின்றது; எனவே, விரை வித்தினைக் குறிக்கிறது, 18மண் - soil. க. உ.9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/152&oldid=777820" இலிருந்து மீள்விக்கப்பட்டது