பக்கம்:கல்வி உளவியல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 133 உள்ளணு வளர்ந்து இரண்டு உள்ளணுக்களாகப் பிரிகின்றன ; இவை இரண்டும் தனித்தனியாக இரண்டு உயிரணுக்களிலும் சேர்கின்றன. ஓர் உயிரணுப் பிரிவிலும் இதே செயல்தான் நடைபெறுகின்றது. இதல்ை நம்முடைய உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவிலும் ஓர் உள்ளனு உள்ளது என்றும், இந்த உள்ளனுவே கருவுற்ற முட்டையின் உள்ளணு விலிருந்து பிரிந்தது என்றும் நாம் அறிகின் ருேம். எனவே, ஒரு தனி யாளின் குடிவழியில் இலட்சக்கணக்கான உள்ளணுக்கள் அடங்கியிருக் படம் 20 : உயிரணுக்கள் பெருகி வளர்தல் கின்றன என்றும், இந்த உள்ளணுக்கள் யாவும் கருவுற்ற முட்டை யினின்று பிரிந்தவை என்றும், இந்தக் கருவுற்ற முட்டை தந்தைவழி யொன்றும் தாய்வழி யொன்றுமாக வந்த இரண்டு உள்ளனுக்களின் சேர்க்கையால் உண்டானது என்றும் தெளிவாகப் பெறப்படுகின்றது. இதுகாறும் அறிந்தவற்றிலிருந்து குடிவழியைப்பற்றி மூன்று முக்கிய கருத்துக்கள் தெளிவாகின்றன : (1) ஒரு குழந்தையின் குடி வழி பெற்றேர் இருவரிடமிருந்தும் ஏற்படுகின்றது; (2) அது கருவுறும் பொழுதே நிலையாக அறுதியிடப்பெறுகின்றது ; தாய் அக் கருவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/156&oldid=777826" இலிருந்து மீள்விக்கப்பட்டது