பக்கம்:கல்வி உளவியல்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 135 உயிரணுவில் 20 இணைகளும் உள்ளன. சோளத்தின் உயிரணுவில் இருப் பவை 10 இன; தக்காளியின் உயிரணுவில் இருப்பவை 12 இணை. மானிட உயிரணுவில் 24 இணைகிறக்கோல்கள் இருக்கின்றன. இந்த கிறக் கோல்களை 24 இணைகளாகப் பிரித்து வைத்தால் ஒவ்வொரு இணையும் பார்வைக்கு ஒரே மாதிரி உருவமுடையதாக இருப்பது தெரியவரும் (படம்-22). உயிரணுப்பிரிவில், ஒவ்வொரு கிறக்கோலும் தன் நீளத்தை அச்சாக வைத்து இரண்டாக உடைகின்றது. ஆகையால் உயிரணு இரண்டாகப் பிரியுங்கால் ஒவ்வொரு உயிரணுவிலும் 24 இணை நிறக் கோல்கள் அமைகின்றன. இவை யாவும் கருவுற்ற முட்டையினின்றே தோன்றியவையாதலின், ஒவ்வொரு உயிரணுவிலும் குடிவழி அடங்கி யுள்ளது. இவ்விடத்தில் இன்னுெரு முக்கிய செய்தியையும் நினைவிலிருத்த வேண்டும். ஒவ்வொரு உயிரணுவிலும் 24இணை நிறக்கோல்கள் இருக் கின்றன என்று மேலே கண்டோமல்லவா ? அதல்ை கருவுறுவதற்குக் காரணமான முட்டையிலும் விக்தணுவிலும் 24 இணை நிறக்கோல்களே இருக்குமென்று நாம் கருதுவோம். ஆனால், உண்மையில் அவ்வாறு இல்லை. ஒருவர் பால் முதிர்ச்சி அடையுங்கால் அவர் உடலில் இன்னொருவகையான உயிரணுப்பகுப்பு ** நடைபெறுகின்றது. இதன் மூலமாகத்தான் இனப்பெறுக்க உயிரணுக்கள்' (பெண்ணிடத்தில் முட்டையும் ஆணிடத்தில் விந்தணுவும்) கிடைக்கின்றன. இது குறைத்துப் பகுத்தல்' என வழங்கப்பெறும். இதில் இனப்பெருக்க உயிரணு ஒவ்வொன்றிலும் முதலிலுள்ள உயிரணுக்களில் பாதியே கிடைக்கின்றது. சாதாரண உயிரணுப் பகுப்பில் நிறக்கோல்கள் இரட் டிக்கின்றன. ஆல்ை, குறைத்துப் பகுத்தல் செயலில் அவ்விணை நிறக் கோல்கள் பிரிந்து ஒவ்வொன்றும் சேய் உயிரணுவிற்குச் செல்லுகின்றது. பின்னர், ஆண் பெண் இனப்பெருக்க உயிரணுக்கள் இணையுங்கால் திரும்பவும் முழுநிறக்கோல்களின் தொகுதி கொண்ட உயிரணு பிறக் கின்றது. இதுவே கருவுறுதல் என்பது. இவ்வாறு உருப்பெற்ற உயிரணு மீண்டும் பிரிந்து வளர்ந்து குழந்தையாகின்றது. இதனைப்படம் (படம் - 23) விளக்குகின்றது. மேற்கூறிய செய்திகளையும் இவற்றை யும் ஒன்று சேர்த்து ஆராய்ந்தால், தனிச்சிறப்புக்குரிய ஓர் உண்மை நமக்குப் புலளுகின்றது. ஒவ்வொரு இணையிலுமுள்ள ஒரு கிறக்கோள் a surá páiré à - sexual maturity. ***-orgoú uðūH - cell division. * * SssrüGluG&s s u$g Gl&ssir - reproductive cells. s s Gsmp$ S ú Lôāść – reduction division.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/158&oldid=777831" இலிருந்து மீள்விக்கப்பட்டது