பக்கம்:கல்வி உளவியல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் xix. இருந்து வருகின்ருள். இவர் ஆங்கிலத்தில் கேட்டார்ப் பிணிக்குக் தகைய வாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல் வன்மை படைத்தவர். எப்பொருளைப்பற்றிப் பேசினும், அதில் சொல்வளமிக்க இலக்கிய மண மும் மெய்ப்பொருளியல் மணமும் கமழும். கடினமான பொருளேயும் கேட்போர் மனத்தில் ஆழமாகப் பதியும்படி எளிய முறையில் விளக் கும் மொழித்திறம் படைத்தவர். ஐரோப்பிய, இந்திய மெய்ப்பொருளியல்துறைகளில் நிபுணராக இருப்பினும் இலண்டன் பல்கலைக் கழகத்தில் உளவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். தம்முடைய அன்பா லும் பரிவாலும் உடன்பணியாற்றும் ஆசிரியர் உள்ளங்களையும் தம்கீழ் பயிலும் மாளுக்கர்களின் உள்ளங்களையும் கவர்ந்தவர். கீழோராயினும் தாழஉரை' என்ற முதுமொழிக் கிணங்க எவரிடமும் மரியாதை யாகப் பழகும் உயர்ந்த பண்புடையவர். இத்தகைய உயர்ந்த பண்புகளையும் சீலங்களையும் ஆராய்ச்சித் திறனையும் உடையவர் இந்த நூலுக்கு அறிமுகம் வழங்கி ஆசிகூறினமைக்கு என் உளங்கனிந்த கன்றி. இந்நூலே வெளியிடுவதற்கு இசைவு தந்த திருவேங்கடவன் பல் கலைக்கழகத்தினருக்கு-சிறப்பாக அதன் துணை வேந்தர் திரு. எஸ். கோவிந்தராஜுலு நாயடு அவர்கட்கு-என் உளங்கனிந்த நன்றி என்றும் உரியது. இப்புத்தகத்தை மூப்பது படங்கள் அணி செய்கின்றன. பல சிக்கலான கருத்துக்களைப் புரியவைக்கவும், படிப்போர் அவற்றைப் புரிந்து கொள்ளவும் அப்படங்கள் பெரிதும் துணை செய்கின்றன என்பதைப் புத்தகத்தைப் படிப்போர் நன்கு அறிவர். இப்படங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் எழுதி உதவியவர் என்னுடைய அரிய நண்பர் திரு. வி. முனியாண்டி அவர்கள்; காரைக்குடி அழகப்பா மாதிரிப் பள்ளியின் ஒவிய ஆசிரியர். அவருக்கு என் இதயங் கனிந்த நன்றி உரியது. இப்புத்தகத்தை அச்சிட மனமுவந்து ஏற்று விரைவில் வெளி யிட்ட மயிலாப்பூர் எஸ். வாலன் கம்பெனியாருக்கும், இதனை நன்முறையில் அச்சிட்டுக் கற்போர் கரங்களில் கவின் பெறத் தவழச்செய்த இராயப் பேட்டை ரீ இராஜா பவர் பிரலினருக்கும் என் மனமுவந்த நன்றியறிதலைப் புலப்படுத்துகின்றேன். அறிவாலும் ஆற்றலாலும் மேற்கொண்டு செயலாற்றும் பணியாலும் சீலத்தாலும் என் உள்ளத்தைக் கவர்ந்தவர் சென்னை மாநில அரசின் நிதி, கல்வி இவற்றின் அமைச்சர் உயர்திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள். கடந்த பத்தாண்டுகட்குமேல் சென்னை மாநில அரசின் அமைச்சரவையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/16&oldid=777835" இலிருந்து மீள்விக்கப்பட்டது