பக்கம்:கல்வி உளவியல்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கல்வி உளவியல் முட்டை அல்லது விந்தணுவிற்குப் போகின்றன என்பதைத் தற். செயல்’** தான் அறுதியிடுகின்றது. கருவுறுதலால் மீண்டும் 48 கிறக் கோல்கள் (24 இணைகள்) அமைகின்றன. எந்த விந்தணு (ஆணிடமுள்ள எந்த 24 கோல்களின் தொகுதி) எந்த முட்டையுடன் (பெண்ணிடமுள்ள எந்த 24 கிறக்கோள்களின் தொகுதி) சேர்ந்து ஒரு புதிய தனியாளே உண் டாக்குகின்றது என்பதையும் “தற்செயலே அறுதியிடுகின்றது. எனவே, குடிவழிச் சட்டங்கள் என்பவை (1) முட்டையிலும் விந்தணுவிலும் உள்ள கிறக்கோல்கள் ' தற்செயலாக' இனம் இனமாகப்பிரிதலையும் (2) கருவுறுதலில் குறிப்பிட்ட விந்தணுக்களும் முட்டைகளும் “தற்செய லாக”த் தொடர்பு கொள்வதையும் பொறுத்த சட்டங்களேயாகும். இக் கூறியவற்ருலும் படம் 23-ஆலும் ஒவ்வொரு குழந்தையும் தாயிட மிருந்தும் தந்தையிடமிருந்தும் ஒரே மாதிரி குடிவழியைப் பெறுகின்றது என்பது பெறப்படுகின்றது. இந்த ஒவ்வொரு பெற்ருேரும் தத்தம் பெற் ருேர்களிடமிருந்து சமநிலைகளில் குடிவழியைப் பெறுகின்றனர் என்றும் அவர்களும் அங்ங்னமே தம் பெற்றேர்களிடமிருந்து சமமாகப் பெறுகின் றனர் என்றும் தெரிகின்றது. எனவே, ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய குடிவழிப் பண்புகளில் பாதியை நேர்பெற்றேரிடமிருந்தும் : பகுதியை பாட்டன்-பாட்டிமாரிடத்தும் ; பகுதியை முப்பாட்டன்-முப்பாட்டிமார் களிடத்திருந்தும், இங்ங்னமே தொடர்ந்தும் வடிவ கணித விகிதத்தில்* பெறுகின்றது. வாழ்க்கை என்னும் நீரோட்டம் தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கின்றது; குழந்தை தன்னுடைய மூலதனத்தைப் பெற்றேர் களிடமிருந்து அல்லது பெற்றேர்கள் மூலம் பெறுகின்றது. இங்ங்ணம் குழந்தையின் குடிவழிப்பண்புகள் முன்னேர் அனைவரையும் பொறுத்ததா தலின், ஒரு குழந்தையின் தாடை (மோவாய்) தன் தாயின் தாடையைப் போலவும், அதன் நெற்றி தந்தையினுடையதைப் போலவும், கண்ணின் கீல நிறம் அதன் பாட்டனுடையதைப் போலவும், அதன் தலைமயிர் அம்மா னுடையதைப் போலவும், அதன் மூக்கு அதன் அத்தையினுடையதைப் போலவும் இருக்கின்றன. குழந்தைகள் இப்பண்புக் கூறுகளை*’ ஒரே இருப்புச்சரக்கிலிருந்து பெற்றன என்றும், அவை அப் பண்புக்கூறுகளை பல்வேறுவிதமாகப் பிரித்தடுக்கினவற்றைக் காட்டுகின்றன என்றும் கூற லாம். பல குழந்தைகள் அண்மையிலுள்ள எந்த மூதாதையரையும் போன்றிருப்பதில்லை; அவை குடிவழியில் நெடுந்தொலைவிலுள்ள ஒருவரிட மிருந்து சில பண்புகளைப் பெறுகின்றன ; பல குழந்தைகள் பண்புக்கூறு களின் கலவையாகத் திகழ்கின்றன.

  • 4 spQsuá - chance. *ã suy su saxâssââsứ - geometrical ratio. 4:பேண்புக் கூறு - trait, 47இருப்புச் சரக்கு - stock.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/161&oldid=777839" இலிருந்து மீள்விக்கப்பட்டது