பக்கம்:கல்வி உளவியல்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கல்வி உளவியல் கின்றது; அப்பொழுதுதான் ஏதாவது ஒரு வழியில் எதிர்வினை புரிய வாய்ப்பு ஏற்படுகின்றது. எது பயனுடையதாகும் என்பது தனியாள் அவருடைய குடிவழி, அவருடைய முன்னனுபவம், அவருடைய உடல் வயது", மனவயதுக் ஆகியவற்றைப் பொறுத்தது. மருதகிலக் காட்சி களை நாம் எத்தனையோ முறை கண்டிருக்கின் ருேம். அது நம் உள்ளத்தைத் தொடுவதில்லை; சிந்தையைக் கிளர்வதில்லை. ஆல்ை, அதைக் காணும் கம்பன் போன்ற கவிஞர்களின் உள்ளத்தில் ஒருவிதத் தூண்டல உண் டாக்குகின்றது. அவரிடமிருந்து வெளிப்படும் துலங்கல், தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கம் தாங்கக் கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம்விற் றிருக்கும் மாதோ?* என்ற கவிதையாக மலர்கின்றது. ஓர் அறை கிறையக் குழுமியுள்ள முதிர்ந்தோர்கள்" அரசியல்பற்றிக் கலந்து ஆய்ந்து கொண்டிருந்தால், அஃது ஒரு குழந்தையின் அறிவுச்சூழ்நிலைக்குச் சிறிதும் ஒவ்வாது. குழந் தையை நீக்கிவிட்டு, அது வதியும் வீட்டையும் குடும்பத்தையும் ஆராங் வதால் யாதொரு பயனும் இல்லை. குழந்தையை வீட்டில் காணவேண் டும்; அது புரியும் எதிர்வினைகளைக் கவனித்தல் வேண்டும். ஒரே வீட்டில் வதியும் இரு குழவிகள் தேவையான ஒரேவித சூழ்நிலையைப் பெறுகின் றன என்று சொல்லுதல் இயலாது. இரு குழவிகளிடையே காணப் பெறும் வேற்றுமைகளின் அளவிற்கேற்ப, அவர்கள் வாழும் சூழ்நிலை யிலும் அதிக வேற்றுமைகள் உள்ளன. பிறப்பதற்குமுன் முதிர்ச்சி' ஒரு மரம் பெரிதாக வளர்வதற்கு முன்னர் அதன் விரை தரைக்குள் புலனாகாமல் வளர்கின்றது. தரையின் கீழ் எழுந்த அதன் வாழ்க்கையும் தரையின்மேல் வளர்ந்த அதன் வாழ்க்கையும் ஒரே தொடர்புடையவை. அங்ங்னமே, மக்களிடையேயும் அவர்களுடைய பிறப்பின் பின் எழுந்து

      • -l-fi sutug - chronological age. 580 or Guug - mental age. க#கம்பரா.நாட்டுப் படலம்-செய். 4. 55 முதிர்ந்தோர். adult. முேதிர்ச்சி

molaturation.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/163&oldid=777843" இலிருந்து மீள்விக்கப்பட்டது