பக்கம்:கல்வி உளவியல்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 14| விளங்கும் வாழ்க்கை பிறப்பின்முன் உள்ளடங்கிக் கிடந்த வாழ்க்கையின் தொடர்ச்சியாகும். கரு என்னும் அரும்பு மலர்ந்த கிலேயே குழந்தை பிறப்பது. எனவே, கருவுலக வாழ்க்கையை ஆராய்வது இன்றியமை யாததாகின்றது. அந்தக் கருவூரிலிருந்தன்றே யாவரும் உறையும் இந்த உறையூருக்குள் புகுந்து அனைவரும் கூடிவாழும் கூடல் உலகிற் புகு கின்ருேம் ? கருவுற்ற உயிரணு எங்ங்ணம் பிரிந்து வளர்கின்றது என்பதை முன் னர்க் கண்டோம். ஊனக்கண்ணுக்குப் புலகைாத இந்த நுண்ணிய ஒற்றையணு எங்ங்ணம் கால்களும் கைகளும், கண்களும், காதுகளும், குருதியீரலும், நுரையீரலும், மூளையும், பிற உறுப்புக்களும் கொண்ட எட்டு. இராத்தல் குழந்தையாக வளருகின்றது ? இதைப்பற்றி ஆராய்வதே கருவுலக ஆராய்ச்சி ; பிறப்பதற்கு முன்னுள்ள முதிர்ச்சியைப்பற்றி ஆராய்வது. தனியாள்களின் வேற்றுமைகளுக்குக் குடிவழியும் சூழ்நிலையுமே காரணம் என்று மேலே கூறிளுேம். கருவுலக வாழ்க்கைக்கும் அக் காரணம் பொருந்தும். அதைப் பொருத்தி விளக்க முயலுவோம். மானிடக் கருவின் வளர்ச்சி நிலையை அறிஞர்கள் மூன்று பிரிவு களாகப் பிரித்து ஆராய்கின்றனர். கருவுற்றது தொடங்கி 15 நாட்கள் வரையிலும் முட்டை கருப்பையில்' ஒட்டாமல் வளர்ந்து வருகின்றது. அப்பருவம் முளைகிலே* அல்லது முதற்குல்நிலை என்று வழங்கப்பெறு கின்றது. இப்பொழுது உயிரணு இரட்டித்துப் பிரிந்து வளர்தல் தொடங்குகின்றது; இச்செயல் தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டே இருக்கின்றது. சுமார் இரண்டு வாரத்திற்குப் பிறகு முட்டை கருப்பையில் ஒட்டிக் கொள்ளுகின்றது. ஒட்டிக்கொள்ளும் இடத்தில் தான் கொப்பூழ்க்கொடி" வளர்கின்றது; இக் கொப்பூழ்க் கொடியின் மூலந்தான் கரு தாயினிடமிருந்து உணவூட்டம்?? பெறுகின்றது (படம் 24). இங்ங்ணம் முளைச்சூல் உருவம் பெருது இரண்டு திங்கள் வரை வளர்ந்து வருகின்றது. இப்பருவம் பிண்ட கிலே அல்லது இளஞ்சூல் நிலை" எனப்பெயர் பெறும். - உயிர் அணுக்கள் இலட்சக் கணக்கில் பல்கிப் பெருகுவதில் வியப் பொன்றும் இல்லை ; அவை பல்வேறு விதமான உயிர் அணுக்களாக 57.55iisou - uterus. 5 8gåíäå - germical period. க9கொப்பூழ்க் Glory - umbilical cord. 6 oz orgyll Lib - nourishment. 6+@st 653 & floo - embryonic period.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/164&oldid=777845" இலிருந்து மீள்விக்கப்பட்டது