பக்கம்:கல்வி உளவியல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 147 குழந்தை பிறந்து சில நாட்கள் பெரும்பகுதி நேரத்தைத் துக்கத் திலேயே கழிப்பினும், கூர்ந்து கவனித்தால் அது பெரும்பாலான இயக்கங் களே இணைத்துப் பயில்வதை அறியலாம். சுவாசித்தல், தும்முதல், இருமுதல், கொட்டாவிவிடுதல், சப்புதல், விழுங்குதல், சிறுநீர்கழித்தல், மலங்கழித்தல் முதலிய செயல்களும் இவற்றுள் அடங்கும். பசியேற் படுங்கால் குழந்தை அழுகின்றது ; புழுப்போல் துடிக்கின்றது ; புயங்களை யும் கால்களையும் தூக்கித்துக்கிப் போடுகின்றது. இவ்வாறு செய்து பிறர் துணையைப் பெறுகின்றது. புயங்களையும் கைகளையும் வளைக்கின்றது ; கைகளை விரிக்கின்றது ; மூடுகின்றது. ஏதாவது கோலைக்கொடுத்தால் இறுகப் பற்றுகின்றது. கால் பெருவிரலே நெளிக்கின்றது ; கண்களையும் வாயையும் மூடிமூடித் திறக்கின்றது. சுருங்கக்கூறினால், அது தன்னு டைய எல்லாத் தசைகளையும் பயன்படுத்துகின்றது. பெரும்பாலும் இவை யாவும் அனிச்சைச் செயல்களே. நாளடைவில் சில அனிச்சைச் செயல் கள் ஐக்கியத் தன்மையைப் பெறுகின்றன. மேற்கூறிய செயல்கள் யாவும் சூழ்நிலையைப் பொறுத்தவை அல்ல. பிறந்து ஒன்று அல்லது இரண்டு திங்கள் கழிந்த பிறகுதான் குழந்தை சூழ்நிலையுடன் வினையாற்றுகின்றது. இப்பொழுது எல்லாப்புலன்களுமே செயற்படத் தொடங்குகின்றன. முதலில் பொருள் அல்லது ஆளேக் கவனிக்கத் தொடங்குகின்றது. பெருமூளையின் புறணி முதிர்ச்சியடைந்த பிறகுதான் இந்தத் துலக்கம் ஏற்படுகின்றது என்று கருத இடமுண்டு. சூழ்நிலையில் ஓர் அக்கறை கொள்வதும், சூழ்நிலையிலுள்ள பொருள்களு டன் வினையாற்றுவதும் புறணிபற்றிய செயல்களே. புறணி முதிர்ச்சி துலக்கமுற்றதும், அது உடலியக்கம்ப்ற் றிய செயல்களின் பொறுப்பேற் கின்றது. அது கீழ்கிலை மையங்களால் செயற்படும் இயக்கங்களைப் பயன் படுத்தி அவற்றைச் சூழ்நிலையிலுள்ள பொருளுக்கேற்ப நெறிப்படுத்து கின்றது. புலன்களின் துணைகொண்டு அவற்றை அறிகின்றது. உற்று நோக்கும் செயல்களும் இயக்கச் செயல்களும் இணைந்தே நடைபெறு கின்றன. தன்னை நோக்கி முறுவலித்து, செல்லங்கொஞ்சும் ஆளே அடை யாளங் கண்டு கொள்கின்றது. புறணி சாதாரணமான கற்றல் செயல்களை மேற்கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தபிறகுதான் இவ்வித நடத்தை குழந்தையிடம் தலைகாட்டுகின்றது. இது பெரும்பாலும் இரண்டாவது அல்லது மூன்ருவது திங்களில்தான் நிகழலாம். கண்ணும் கையும் . சூழ்கிலேயுடன் குழந்தை தொடர்பு கொள் ளும்பொழுது, கண்ணும் கையும் முக்கிய கருவிகளாகச் சேவை புரிகின் 7 5 Lig soft — cortex.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/170&oldid=777858" இலிருந்து மீள்விக்கப்பட்டது