பக்கம்:கல்வி உளவியல்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 149 பெரிய தலையும் நடைக்கு இடையூருக இருக்கின்றது. அன்றியும், சிக்க லான செயலாகிய கடையை மேற்கொள்வதற்கு முன்பு, குழந்தையின் மூளை கன்முறையில் முதிர்ச்சி பெறவேண்டியதாகவுள்ளது. கடத்தலில் இரண்டு முக்கிய கூறுகள் உள : (1) நடத்தல் என்பது ஒரு நரம்பு மையத்தால் கட்டுப்படுத்தப்பெறும் ஓர் இயல்பான இயக்கம் ; இந்த நரம்பு மையம் முதிர்ச்சியால் துலக்கமுறுவது. நடத்தல் ஓராண்டு அல்லது அதற்குமேற்பட்டு செயற்படக்கூடியது. (2) கடத்தல் என்பது கற்ற பல.இயக்கங்களின் கூட்டான செயல் , இந்த இயக்கங்கள் யாவும் பல்வேறு இயக்கங்களுடன் மேற்கொண்ட சோதனைகளால் பெற்றவை. வெற்றியாகவுள்ள இயக்கங்கள் மட்டிலுமே நடத்தலில் மேற்கொள்ளப் பெற்றவை. இதைச் சற்று ஆராய்வோம். முதலாம் யாண்டில் குழந்தை இருபோக்குகளில் தன் செயல்களைத் துலக்கம் அடையச் செய்கின்றது. ஒருபோக்கு இடப்பெயர்ச்சி பற்றி யது; மற்ருெரு போக்கு சமகிலை பற்றியது. முதல் சில திங்கள்வரை அது இடம்பெயர்வதில் சிறிதுகூட முயற்சி கொள்வதில்லை. 6-7 திங் களில் தரையோடுதரையாக நகர99 முயலுகின்றது ; 8-ஆம் திங்களில் ஊர்வதில் வெற்றியடைகின்றது. சிறிது காலத்திற்குப் பிறகு கைகளா லும் முழங்கால்களாலும் எழுந்திருக்கக்கூடும் ; 9-ஆம் திங்களில் நன்கு தவழ்ந்து செல்லும் அளவுக்குத் துலக்கமடைகின்றது. முதலில் வயிறு தரையில் இடித்துக்கொண்டு பஞ்சாங்க நமஸ்காரம்’ செய்வது போல் கிடக்கின்றது. பிறகு மார்பைத்துக்க முயல்கின்றது. முழுப்பளுவை யும் கைகளின்மேலும் முழங்கால்களின்மேலும் கிறுத்த இப்பொழுது முடிகிறதில்லை. இயக்கங்கள் விகாரமாகத் தோன்றும். நாளடைவில் மார்புதரையின் மீது படாமல் உடலை மேலே தூக்கிக்கொண்டு கையை யும் காலையும் ஊன்றிகிற்கின்றது. அடுத்தபடியாகக் காலை நீட்டி நிற்கா மல் மடக்கிக்கொண்டு காலின் முட்டி தரையில்படக் கைமேல் ஊன்றி கிற்கின்றது. இந் நிலையில் பழகிய பின்னர், கால்களும் கைகளும் தொடர் புறுகின்றன. இதன் பின்னர் குழவி காலையும் கையையும் மாற்றி மாற்றித் தவழ்ந்து நடக்கின்றது. துலக்கமுறும் விகிதத்தில் குழந்தை களிடம் வேற்றுமை காணப்பெறினும், பெரும்பாலும் எல்லாக் குழவி களும் ஊர்தல்-தவழ்தல்-கடத்தல் என்ற ஒழுங்கினையே மேற்கொள்ளு கின்றன. சமநிலை பெறுவதிலும் தலை-உடல்-கால் என்ற ஒழுங்கினைக் காணலாம். 3-4 திங்களில் தலையை கிலேயாகத் தூக்கி நிறுத்துகின்றது; 18 இடப் பெயர்ச்சி -locomotion. 7°so dar - balance. கெர்தல் அல்லது நகருதல் - crawling.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/171&oldid=777860" இலிருந்து மீள்விக்கப்பட்டது