பக்கம்:கல்வி உளவியல்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் Í 5Í முதிர்ச்சிக்கும் கற்றலுக்கும் இடையே நடைபெறும் இடைவினை குழந்தைபெறும் திறன்கள் இயற்கையாக முதிர்ச்சியின் பயனுக எழுகின்றனவா, அல்லது செயற்கைப் பயிற்சியின் பயனுக விளை கின்றனவா என்பதை அறிந்துகொள்ள வேண்டுமாயின் முதிர்ச்சிக்கும் கற்றலுக்கும் இடையே நடைபெறும் இடைவினையை ஆராய வேண்டும். முதிர்ச்சி என்பது உயிரியின் உள்ளிருக்கும் ஆற்றல்களின் இயக்கத் தால் தோன்றும் மாறுதலாகும். பயிற்சி என்பது சூழ்நிலையின் காரண மாக உயிரியிடம் எழும் மாறுதலாகும். பிறந்த பிறகும் அதற்கு முன் னரே தொடங்கிய பொறிநுட்பம் துலக்கமடைகின்றது. உயிரணுவின் எல்லைக்குள் உள்ள நிலைகளும், உயிரணுவிலுள்ள கிலைகளும் இன் னும் செயற்படும் நிலையிலேயே உள்ளன. எனவே, முதிர்ச்சி பிறப்பதற்கு முன்னுள்ளபடியே பிறந்த பின்னரும் நடைபெறுகின்றது. பிறந்தபின்னர் முதிர்ச்சியில் பங்குபெறும் முக்கிய செல்வாக்கு அதனை விரைவில் எய் தச் செய்தலே (பால் முதிர்ச்சி சில தட்பவெப்ப நிலைகளில் விரைவாக நடைபெறுவதுபோல்); அல்லது அதன் வளர்ச்சியைக் குறைத்தலே (உணவூட்டம் போதுமானதாக இராதபொழுது சாதாரண வளர்ச்சியில் சில சமயம் தடை நேரிடுவது போல). முதிர்ச்சியால் நேரிடும் துலக்கத்தையும் தூண்டல்-துலங்கல், அல் லது கொள்வாய் நரம்பு, இயங்குவாய் பொறிநுட்பங்களால் நேரிடும் துலக்கத்தையும் வேற்றுமைப்படுத்தி ஆராயவேண்டும். நாம் நம் புயத் தில் ஓர் இருதலைத் தசையைப் பெற்றிருப்பது முதிர்ச்சியைப் பொறுத் தது ; கம்மிடம் உள்ள அதன் பருமனுக்கும் இன்னொருவரிடமுள்ள அதன் பருமனுக்கும் உள்ளவேறுபாடு முதிர்ச்சியைப் பொறுத்ததன்று ; நம்மிடம் அது அதிகப் பருமனக இருப்பதற்கு நாம் தொடர்ந்து கொடுத்த பயிற்சியே காரணமாகும். நம்மிடமுள்ள மானிட மூளைக்கு முதிர்ச்சியே காரணமாகும் ; ஆனல் நம்மிடமுள்ள பழக்கங்கள், நம்முடைய அறிவு ஆகியவை முதிர்ச்சியின் காரணமன்று. அவையாவும் தூண்டல்-துலங் கல் செயலின் விளைவாக- அஃதாவது மூளை பயிற்சியளிக்கப் பெற்றதன் பலளுக-ஏற்பட்டவை ; கற்றவை. நம்மிடமுள்ள அறிவும் பழக்கங் களும் பிறரிடம் இல்லாதிருக்கலாம். ஆகவே, முதிர்ச்சியால் ஏற்பட் s2@so- estår - interaction. 8 sz-taggmests sred&oš Sáir 2. srst - intracellular, 84a_3rgolsâşāras - intercellular.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/173&oldid=777864" இலிருந்து மீள்விக்கப்பட்டது