பக்கம்:கல்வி உளவியல்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கல்வி உளவியல் டவை சாதாரணமாக அந்த இனத்தைச் சார்ந்த ஒவ்வொருவரிடமும் காணப்பெறும். இதிலிருந்து முதிர்ச்சிக்கும் கற்றலுக்கும் தொடர்பு இல்லை என்று கொள்ளலாகாது. ஏனெனில், நாம் கற்பவையெல்லாம் நம்முடைய முதிர்ச்சியைப் பொறுத்தவை. என்னதான் தூண்டுதலையும் துணையையும் கொடுத்தாலும் புனிற்றிளங் குழவிக்கு நடை கற்பிக்க இயலாது ; ஆளுல் போத்தலைப் பார்த்தவுடன் சப்பிக்குடித்தலைப் பயிற்றலாம். ஆறு திங் கள் குழந்தைக்குப் பெருவிரலையும் சுட்டுவிரலையும் கொண்டு ஒரு சிறு கண்ணுடி உண்டையை (pellet) எடுக்கக் கற்பிக்க இயலாது ; ஆளுல் கீலுள்ள ஒரு பெட்டியின் மூடியைத் தூக்குவதில் அதனைப் பயிற்ற முடியும். ஒராட்டைப் பருவமுள்ள குழவிக்கு என்னதான் முயன்ருலும் பெருக்கல் வாய்பாட்டைக் கற்பிக்க முடியாது ; ஆளுல், அதனைக் கயிற்றில் கட் டிய பொருளை அண்மைக்கு இழுப்பதில் பயிற்சி தரலாம். முதிர்ச்சி, கற்றல்பற்றி உளவியலார் மேற்கொண்ட சில சோதனை களே ஆசிரியர்களும் பெற்ருேர்களும் அறிதல் சாலப் பயன்தரும். சோதனை.1 : கோவா என்பது வாலில்லாக் குரங்கின் பெண் குட்டி ; டோனல்டு என்பவன் ஓர் ஆண்குழந்தை. கோவா டோனல்டை விட இரண்டு திங்கள் இளையது. இருவரையும் ஒரே வீட்டுச் சூழ்நிலை யில் ஒரே மாதிரியாக வளர்த்தனர். எந்த அளவுக்கு கோவா மனித இயல்பினைப் பெறுகின்றது என்பது ஒரு நோக்கம், சில கூறுகளில் கோவா டோனல்டைவிட விரைவாகக் கற்றது. கயிறு தாண்டுதல், வளர்ப்புப் பெற்ருேருடன்ஒத்துழைத்தல், வேண்டுகோளுக்குக் கீழ்ப்படிதல், முத்தமிடல், சிறுநீர் மலங்கழித்தல் செயல்களை எதிர்பார்த்தல், கரண்டி யால் உண்ணல், கண்ணுடிப் பாத்திரத்தால் பருகுதல், இங்குவா முத்தந்தா கைகுலுக்கு கெட்ட பெண் போன்றவற்றை அறிதல் ஆகியவற்றில் டோனல்டைவிட கோவாவிடம் முன்னேற்றம் காணப் பட்டது; காரணம், அதனிடம் முதிர்ச்சி அதிகரித்திருந்தது. கோவா இளையதாயினும், உடல் வன்மையிலும் உளத்திண்மையிலும் டோனல்டை விடச் சிறந்திருந்தது. எனினும், ஒரு மனிதன் முதிர்ச்சியின் மேல்எல் லையை அடைவதைவிட ஒரு வாலில்லாக் குரங்கு விரைவாக அதன் முதிர்ச்சி எல்லையை அடைகின்றது. தொடக்கத்தில் கோவா டோனல்டைவிடப் பலவற்றில் முன்னேற் றம் அடைந்தாலும், டோனல்டும் கோவாவைவிட வேறு பலவற்றில் முன்னேற்றம் அடைந்திருந்தான். 15-ஆம் திங்களில் டோனல்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/174&oldid=777866" இலிருந்து மீள்விக்கப்பட்டது