பக்கம்:கல்வி உளவியல்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 155. சமூகப் பொருளாதார ஏற்றம் போன்ற எண்ணற்ற வன்மைகள் அடங்கி யுளளன, உடலுக்கும் உள்ளத்திற்கும் உள்ள உறவு இவ்விடத்தில் உடலுக்கும் உள்ளத்திற்குமுள்ள உறவினை அறிதல் இன்றியமையாதது. இந்த உறவைப்பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. எனினும், அனைவரும் ஒப்புக் கொள்ளும் முறையில் அறிவியல் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்பெற வில்லை. உடல்வேறு, உள்ளம்வேறு என்று சாதாரண மக்கள் எண்ணி லுைம், இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. உடல் உள்ளத்தைப் பாதிக்கின்றது; அங்ங்ணமே உள்ள மும் உடலைப் பாதிக்கின்றது. இதையே இன்னுெருவிதமாகக் கூறினல் ஒருவனுடைய ஆளுமையில் உடற்கூறும் உண்டு; உளக்கூறும் உண்டு. உடற்செயல்களும் உளச் செயல்களும் ஒன்ருேடொன்று உறவுகொண் டிருக்கின்றன. இவ்வுறவு உள்ளத்திற்கும் உடலின் பகுதியாகிய நடு நரம்பு மண்டலத்திற்கும், உடலிலுள்ள சுரப்பிகளுக்கும் ஏற்பட்டிருக்கின் றது என்பது தெளிவு. நடுநரம்பு மண்டலத்தைப்பற்றியும் சுரப்பிகளைப் பற்றியும் முன்னரே விளக்கியுள்ளோம். உடல் உள்ளத்தைப் பல வழிகளில் பாதிக்கின்றது. மூளையின் அள விற் கேற்பவும் அதன் அமைப்பிற்கேற்பவும் ஒருவருடைய அறிதிறன் அமைகின்றது. எனவே, அறிதிறனின் உள்ளார்ந்த இயல்பு பிறவியிலேயே அமைந்து விடுகின்றது; அதை மாற்றவோ அதிகரிக்கச் செய்யவோ இய. லாது. அறிதிறன் மூளையினுள்ள மடிப்புக்கேற்றவாறு அமைந்துள் ளது என்று கண்டறிந்துள்ளனர். ஆளுமை வளர்ச்சியில் அறிதிறன் பெரும் பங்குகொள்ளுகிறது. மேலும் உடற்குறைகளும் (குருடு, செவிடு போன்றவை) ஆளுமையைப் பாதிக்கின்றன. ஹெலன் கெலர்" என்ற பெருமாட்டி இதற்கு விதிவிலக்காகலாம்; ஆளுல், அனைவரும் அவ்வா றில்லை என்பதை நாம் அறிதல் வேண்டும். இந்தக் குறைபாடுகளால் பலரது வாழ்க்கை பெரும்போராட்டமாகவே இருந்துவருகின்றது என்பது தெளிவு. இயற்கையான உயரத்தைவிடக் குறைந்திருந்தால்கூட வாழ்க்கையில் ஒருவர் கொண்டுள்ள மனப்பான்மை மாறுகின்றது. சிறப் பாக மகளிரிடம் உடல் வனப்பு அவர்களின் ஆளுமை வளர்ச்சியைப் பெரி தும் பாதிக்கின்றது என்பதை நாம் அன்ருட வாழ்க்கையில் காணலாம். மெல்லிய உடலும் தசைமிக்க உடலும்கூட வழக்கத்திற்குமாருக விளைவு souoạúųảsæsir - convolutions, 87Gşm@sosir Gæsoit - Hellen Keiler.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/177&oldid=777872" இலிருந்து மீள்விக்கப்பட்டது