பக்கம்:கல்வி உளவியல்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கல்வி உளவியல் களே உண்டாக்கிவிடுகின்றன. உடல் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கும் பொழுது கம்மால் நன்கு சிந்திக்க முடிகிறதில்லை. சுரப்பிகளில் ஊறும் சாறுகள் தக்கமுறையில் அமையாவிட்டால் உடல்நிலை பாதிக்கப்பெற்று உள்ளமும் மீப்பண்புகளும்மோறுகின்றன என்பதை முன்னரே விவரித் துள்ளோம். இனி, உள்ளம் உடல்மேல் எங்ங்னம் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதைச் சிறிது விளக்குவோம். ஒருவர் அச்சத்தில்ை உடலைக் கொண்டு செய்யும் செயல்களைச் சாதாரணமாக அவரால் செய்ய இயலாது என்பதை யாவரும் அறிந்ததே. ஒருவரை ஒரு காய் அல்லது காளை விரட்டும்பொழுது சாதாரணமாக அவரால் தாண்ட முடியாத குட்டிச்சுவரையும் அவர் தாண்டிக்குதித்து ஓடுகின்றர். சிலசமயம் அச்சம் ஒருவருடைய உடல் வன்மையை மிகவும் குறைத்து அவரை எவ்விதச் செயலும் ஆற்ற முடியாதபடி செய்துவிடுவது முண்டு. மனத் திண்மையால் சிலர் செயற்கரிய செயல்களையும் நிறைவேற்றுகின்றனர்; பொறுக்க முடியாத துன்பங்களையும் சகித்துக் கொள்ளுகின்றனர். மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டதும் பசிதோன்ருது யோகின்றது; துக்க மான செய்தி வந்தால் உள்ளம் தளர்ந்து போகின்றது. உணவை உற்சா கத்துடன் உண்டால் செரிமான நீர்கள் கன்கு ஊறுகின்றன. சினமும் அச்சமும் செரித்தலைத் தடுத்துவிடுகின்றன. மேலான அறிவுடைய விலங்குகள் நன்கு வளர்ந்து தேர்ச்சி பெற்ற மூளையைப் பெற்றிருக்கின்றன. மீனைவிடப் பறவையும், பறவையைவிட எலியும், எலியைவிட நாயும், நாயைவிடக் குரங்கும், குரங்கைவிட மனிதனும் படிப்படியே கன்கு வளர்ந்த மூளைகளையும் அதிகமான அறி திறனையும் பெற்றிருக்கக் காண்கின்ருேம். இவற்றிலிருந்தும் உடலுக்கும் உள்ளத்திற்கும் உள்ள உறவினை அறிந்து கொள்ளலாம். உடலில் மாறுபாடுகளை ஏற்படுத்தாத உள்ள நிகழ்ச்சிகளைக் காண்ப தரிது. அங்ங்ணமே, உள்ளகிலையை மாற்ருத உடற்செயல்கள் இருக்க முடியாது. இக் காரணம்பற்றியே நரம்புகளின் அமைப்பு, அவை செயற் படும் முறை, உணவு செரித்தல், குருதியோட்டம் முதலிய உடலின் செயல்களை உளவியல் பயில்வோரும், உள்ளக்கிளர்ச்சி, சிந்தனை போன்ற உள்ளத்தின் செயல்களை உடலியல் பயில்வோரும் ஆராய்கின்றனர். எனவே, உடலும் உள்ளமும் ஒரே உயிரியின் இரண்டு கூறுகள் என்று தற்கால அறிஞர்கள் முடிவுகட்டியிருக்கின்றனர். sisinarą - temperament.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/178&oldid=777874" இலிருந்து மீள்விக்கப்பட்டது