பக்கம்:கல்வி உளவியல்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கல்வி உளவியல் உணவூக்கமே ஆளும் இயல்பூக்கமாகும். ஒதுங்கூக்கம் பிந்தித் தோன்று கின்றது விடுப்பூக்கம் பலப்படுகின்றது; முதன்மையூக்கம் முன்ன ணிக்கு வருகின்றது. குமரப்பருவத்தில் காதலுக்கத்தின் ஆட்சி ஓங்கு கின்றது. முதுமைப்பருவத்தில் இயல்பூக்கப் போக்குகளின் வன்மை குன்றி விடுகின்றது. பருவம்பற்றிய இவ்விதமாறுபாடுகள் ஒருபுறமிருக்க, இரு பாலாரிடம் தோன்றும் இயல்பூக்கங்களின் அமைப்பும் மாறுபாடுகளுடை யது. மகவூக்கம்?? மகளிரிடம் தனிச் சிறப்புடன் அமைந்திருக்கின்றது. மேலும், காதலுக்கம் இருபாலாரிடத்தும் வெவ்வேறு நடைமுறையை உண்டுபண்ணுகின்றது. மக்கள் திறத்திலும் விலங்குகளின் திறத்திலும் அஃது ஆண் இனத்தில் தன்னெடுப்பையும் ஆடம்பரத்தையும் தீவிரப் படுத்துகின்றது. காதலால் உந்தப்பட்ட இளைஞனுடைய செயல் ஆண் மயிலின் செயலை ஒத்திருக்கின்றது. மகளிரோ இவ்வமயங்களில் அடக்க மும் சினக்குறியும் உள்ளவர்களாகக் காணப்பெறுகின்றனர். அச்சம் ஆண்களேவிடப் பெண்களிடமே அதிகமாகக் காணப்படுவதாக எண்ணி வருகின்ருேம். போரூக்கமும் முதன்மையூக்கமும் ஆண்களிடமே வலுத் திருக்கின்றன. இவ்வியற்கை வேறுபாடுகள் சம்பிரதாயத்தாலும் சமூக ஆதிக்கத்தாலும் வன்மையடைகின்றன. இயல்பூக்கங்களே நமக்கு ஆற்றலைத் தருகின்றன. பெட்ரோலின்றி மோட்டார் வண்டி ஓடாது ; அதுபோலவே இயல்பூக்கங்களின்றி கம் முடைய வாழ்வு நடைபெறமுடியாது. மேலும், இயல்பூக்கங்களைச் சிதைத்துவிடவும் முடியாது. அவற்றை அறிதிறனலும் பயிற்றலாலும் சமூககலமாகிய உயரிய நோக்கத்தைப் பெறும்படி உயரிய மடைமாற்றம் செய்து தகுந்த பற்றுக்களே வளர்க்கலாம். இதுவே பயிற்றலின் முக்கிய நோக்கமாகும். o señGå gå so -instinct of curiosity. oogpg|siraptogàsứ – instinct of Self-assertion a 7 päçışşū - parental instinct. 9 Supgååår - Beritiments.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/182&oldid=777886" இலிருந்து மீள்விக்கப்பட்டது