பக்கம்:கல்வி உளவியல்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும் ஊக்குகில் : நாம் பல முயற்சிகளில் ஈடுபடுகின்ருேம். அவ்வாறு ஈடுபடுவதற்கு நம்முடைய தேவைகளே மூலகாரணமாகும். உயிரிகள் யாவும் தத்தம் தேவைகளைப் பெறுவதற்கு ஊக்கம் கொள்கின்றன. தேவைகளைப் பெறுகின்ற நாட்டத்தில் அவற்றைச் செலுத்தி ஊக்கும் ஆற்றலே ஊக்குநிலை" எனப்படும். எல்லாப் பிராணிகளும் பசி, தாகம், காதல் ஆகியவற்ருல் தூண் டப்பெறுகின்றன. இந்தத் தூண்டுதல்களை உந்தல்கள்’ என்று வழங் குவர் உளவியலார். இந்த உந்தல்கள் கம்மைச் சும்மா இருக்க வொட் டாமல் இயங்கவைக்கின்றன. இவண் கூறப்பெற்ற பசி, தாகம் முதலி யவை உள்ளுறுப்புக்களின் நிலைகளாகும். இவற்ருல் உள்ளுறுப்புக்கள் ஒருவித இறுக்கம் (tension) அடைகின்றன. இவ்விறுக்கத்தை நீக்கு வதற்கு அவற்றிடம் இயற்கையாக ஓர் உந்தல் ஆற்றல் எழுகின்றது. இத்தகைய உந்தல்களே பலவித ஊக்கு நிலைகளுக்கு அடிப்படையா கின்றன. துரண்டுபொருள்களும் ஊக்கிகளும் : உணவு போன்ற பொருள் களும், தட்ப-வெப்பநிலை மாற்றங்கள் போன்ற நிலைகளும், கழிவுப்பொருள் களை அகற்றல் போன்ற செயல்களும் ஊக்குநிலைச் செயல்களில் கொண்டுசெலுத்துபவை. இவற்றைத் தூண்டு பொருள்கள்’ என வழங்குவர் உளவியலார். இவ்விடத்தில் ஒன்று சிந்தித்தற்குரியது. தூண்டுபொருளால் உந்தப்பெறும் நடத்தை நேரிடுங்கால், உந்தல் என்ற சொல்லுக்குப்பதிலாக ஊக்கி’ என்ற சொல்லைக் கையாளுவர். பசியினல் செயற்படும் பிராணி உடனே உணவு தேடும் ஊக்கியைப் பெறுகின்றது. உந்தலால் ஏற்படும் செயல் குருட்டுத்தனமாக இருக்க லாம். ஆனல், ஊக்கியால் ஏற்படும் செயலில் ஒரு நோக்குண்டு ; 1 *gé, (5 floo - motivation. 2 2.É;65&r - drives. S gis && Quiróðr ssir - incentives. 4 st-ào; - behaviour. 5 or 3&-motive. க. உ-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/183&oldid=777888" இலிருந்து மீள்விக்கப்பட்டது