பக்கம்:கல்வி உளவியல்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 கல்வி உளவியல் திசையுண்டு. சுருங்கக் கூறின், உந்தல் "உள்ளிருந்து தள்ளுகின்றது'; ஊக்கி ஒருபொருத்தமான திசையில் தள்ளுகின்றது’. ஊக்கு கிலேவகைகள் ஊக்கு கிலைகளை மூவகைப்பகுத்துப் பேசலாம். அவை: (1) உயிரி யல் ஊக்கிகள்" (ii) வேட்கைகளும் வெறுப்புக்களும் (iii) பயின்ற ஊக்கிகள். இவற்றை ஒவ்வொன்ருக ஆராய்வோம். உயிரியல் ஊக்கிகள் : உடலின் உள்நிலைகளுக்கேற்றவாறு இவை கம்மிடம் தோன்றுகின்றன. பசி, தாகம், தூக்கம், பாலுந்தல் போன்ற உந்தல்கள் உயிரியல் ஊக்கிகளாகும். இவற்றுள் பசியை வைத்து விளக்குவோம். குருதியில் சருக்கரைச்சத்து குறையும்பொழுது இரைப்பை சுருங்குவதால் பசி உண்டாகின்றது. இதல்ை பிராணிகளுக்கு நிலைகுலைவு உண்டாகின்றது. இதுவே அவற்றை உணவுதேடும் ஊக்கத் திற்செலுத்துகின்றது. மற்றும், தத்தம் இயல்புக்கும் சூழ்நிலக்கும் தக்கவாறு உணவைப் பெறுவதற்கும் பிராணிகள் பயிற்சி வாயிலாகத் தெரிந்து கொள்ளுகின்றன. அதற்கான பழக்கங்களையும் மேற்கொள்ளு கின்றன. பசி முதல்நிலை உந்தலாகவும்", உணவு அருந்தும் பழக்கம் வழிகிலே உந்தலாகவும்" அமைகின்றன. குறித்த நேரத்தில் நாம் உணவு அருந்தும் பழக்கத்தின் காரணத்தால் அந்நேரங்களில் நமக்கு பசி உண்டாகின்றது. இயற்கையான பசி இல்லாத காலத்தும் நம்மைக் கவரத்தக்க உணவு அண்மையில் இருப்பின் நமக்குப் பசி உண்டா கின்றது. பசி நீக்குவதற்குரிய ஊக்குநிலைகள் நாம் மேற்கொள்ளும் பல முயற்சிகளுக்குக் காரணமாக இருக்கின்றன. ஆளுல், இம்முயற்சிகளுக் கும் பசிக்கும் உள்ள தொடர்பை நாம் பெரும்பாலும் கவனிப்பதில்லை. நாகரிக சமுதாயத்தின் தொழில் வகை, பொருளாதாரப் பரப்பு, கலை, அரசியல் என்பவற்றில் எல்லாம் இத் தொடர்பு பின்னிக் கிடக்கின்றது. நாகரிக வளர்ச்சிக்குப் பசியைப்பற்றிய ஊக்குகில் காரணமாவதுபோல் பெரியபோர்களுக்கும் புரட்சிகளுக்கும் அது காரணமாகின்றது என்பது வரலாற்று உண்மையாகும். வேட்கைகளும் வெறுப்புக்களும் : பசி என்ற உந்தலை மேலே கண்டோம். பழக்கப்பட்ட பசியே வேட்கை என்பது. மணம் வீசும் Teஉயிரியல் ஊக்கிகள். biological motives. 7& ©60psi-disequali brium. e முதல் கில உந்தல் - primary drive. வழிகில உந்தல் - secondary drive. 10 Galicos - appetite 11 Ga. güt - aversion.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/184&oldid=777890" இலிருந்து மீள்விக்கப்பட்டது