பக்கம்:கல்வி உளவியல்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்கு நிலையும் உள்ளக் கிளர்ச்சிகளும் 163 சுவையான உணவு, கண்ணக்கவரும் பான வகைகள் இவற்றைக் கண்ணுறும்பொழுதும் அவற்றை உண்ணவேண்டும், பருகவேண்டும் என்ற அவா எழுகின்றது. பசியில்லாதபொழுதும் அவற்றை உண்கின் ருேம் பருகுகின்ருேம். இங்ங்னமே தீங்குபயக்கும் உணவு வகைகள், தீயகாற்றம் வீசும் உணவுகள், பான வகைகள் ஆகியவற்றை வெறுக்கின் ருேம். வேட்கையும் வெறுப்பும் கம்செயலைத்தூண்டி, நடத்தி, நெறிப் படுத்துகின்றன ; உந்தல்களைப்போலவே இவையும் மனித நடத்தையைப் பாதிக்கின்றன. நாம் ஒருசில தூண்டல்களை நாடுவதற்கும் ஒருசில வற்றை ஒதுக்குவதற்கும் இதுவே காரணமாகும். எதிர்பால் வேட்கை : சமூக வாழ்க்கையில் எதிர்பால் வேட்கை யின் வன்மையை நாம் அறிவோம். பசியின் வன்மையை இதன் வன் மைக்கு ஒப்பிடலாம். ஆயினும், உயிர்வாழ்வதற்கு இவ்வேட்கைச் செயல்கள் இன்றியமையாதன அல்ல. குருதியில் காணப்பெறும் ஒருசில வேதிப்பொருள்களே” இவ்வேட்கை மீதுர்வதற்குக் காரணமாகும், சில உட்சுரப்பிகள் சுரக்கும் சாறுகளால் இவ்வேட்கை வலிமை பெறுகின் றது. இனப்பெருக்க உறுப்புக்களில் காணப்பெறும் சில உயிரணுக்கள் இச்சாறுகளைச் சுரக்கின்றன. சுரப்பிகளை நீக்கினுல் பால் வேட்கை குறையும், பசி வேட்கையைப்போலவே, பால் வேட்கையும் பழக்கத்தினுல் ஏற்படுவது. உட்சுரப்பிகளில் சுரக்கும் சாறுகளுடன், அனுபவத்தில் முதல் நிலையாகப்பெறும் கூறுகளும் பால் வேட்கையைத் தூண்டுகின் றன. (எ.டு) பெண்ணிடம் காணப்பெறும் பெண்தன்மை, வனப்பு முதலி யன ; ஆணிடம் காணம்பெறும் ஆண்தன்மை, உடல்வன்மை முதலியன. ஆண்பாலாரும் பெண்பாலாரும் அன்ருட வாழ்க்கையில் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்களும் பால் வேட்கையைத் தூண்டும் வன்மையான கூறுகளாகும். மனிதனின் ஏனையவேட்கைகளைப்பற்றி இன்னும் ஒன்றும் தெரிய வில்லை; அவை வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதனவா என்பது கூட இன்னும் தெளிவாக அறியப்பெறவில்லை. பயிற்சியாலும் அவை பாதிக்கப்பெரு. அவை இயல்பு வேட்கைகளோ, அன்றி சமூக வேட்கை களோ என்பதுகூடத் தெளிவாகப் புலகைவில்லை. பயின்ற ஊக்கிகள் : இவை எளிய உடல் தேவைகளினின்றும் முற்றிலும் மாறுபட்டவை. ஆயினும், இவை எளிய உடல் தேவைக 12 Gaoung; chemical substances. 1 3 ua? sirp 2ør å sta sir - derived motive8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/185&oldid=777892" இலிருந்து மீள்விக்கப்பட்டது