பக்கம்:கல்வி உளவியல்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கல்வி உளவியல் யறிஞர்கள் பயன்களாலேயன்றி கற்றல் நடைபெற முடியாது எனப் பகர் கின்றனர். தண்டனையைப்பற்றியும் பல்வேறு கருத்துக்கள் நிலவு கின்றன. ஆளுல், பலர் தண்டனையையும் பலன் என்னும் தலைப்பி னுள்ளேயே அடக்கிக் கூறுகின்றனர். காரணம், தண்டனையிலிருந்து தப்பு வது பலன் தருவதாகும். என்போலவோ எனின், கோவிலிருந்து தப்புவது பசியிலிருந்து தப்புவதுபோல என்க. கற்றலில் தண்டனையின் பலன்கள் யாவும் கோவிலிருந்து விலகும்நிலை எவ்வாறு அமைக்கப் பெற்றுள்ளது என்பதைப் பொறுத்தது எனலாம். இதிலிருந்து தண்டனை மூலம் கற்பிக்கும் முறை நல்லதென்று கொள்ளல் தவறு. சில நிலை களில் தண்டனையும் கற்பிக்கும் வழியாக அமைதல் கூடும் என்பதையே ஈண்டு சுட்டுகின்ருேம். உலக வாழ்க்கையிலுள்ளதுபோலவே, பள்ளி வாழ்க்கையிலும் பரிசில்கள், தண்டனைகள் போன்ற வழி நிலை ஊக்கிகள் சிறந்த இடம் பெறுகின்றன. பரிசில்கள் : உலகில் நன்றக வேலைசெய்பவர்கட்குச் சம்பளம் உயர்த்தப்பெறுகின்றது; அங்ங்ணம் செய்யாதவர்கள் வேலையினின்று க்ேகப் பெறுகின்றனர்; அல்லது அபராதம் விதிக்கப் பெறுகின்றது. இந்த உண்மையை அப்படியே வீட்டில் குழந்தையின் பெற்றேர்கள் கையாளுகின்றனர். விசிறி எடுத்துக்கொண்டு வா ; கற்கண்டு தரு கிறேன்’ என்கின்ருள் அன்னை. எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பொம்மை வாங்கித் தருவேன் ;இல்லாவிட்டால் அடிப்பேன்’ என்கின்ருர் தந்தை. வீட்டில் அன்னையும் பிதாவும் கையாளுகிற முறையை யொட் டியே பள்ளியிலும் ஆசிரியர்கள் குழந்தைகளின் நடத்தையிலும் கற்றலி லும் மேம்பாடு அடைவிக்கும் பொருட்டு பரிசில்களையும் தண்டனைகளை யும் மேற்கொள்ளுகின்றனர். இவை எந்த அளவு பயன் அளிக்கின்றன? இவற்றைக் கையாளுவதெங்ங்னம்? பரிசில் வழங்குதல் உடன்பாட்டு முறையாகும் தண்டனை தருதல் எதிர்மறை முறையாகும். பொன் மீன்கள் வழங்குதல், மதிப்பெண்கள் தருதல், வரிசை மதிப்பு சுட்டுதல், இடம் மாற்றல், பாராட்டு, கெளரவப் பதவி (வகுப்புத் தலைமைப் பதவி போன்றவை), படிப்புதவி, வகுப்பு மாற்றம் போன்றவை பள்ளியில் மேற்கொள்ளப்பெறும் பரிசில் வகைகள். இவை யாவும் மாளுக்கர்களின் ஆற்றலை வளர்க்கின்றன; அவர்களே கல்வழியில் கொண்டுசெலுத்துகின்றன. தான்-தொடங்காற்றல்," போட்டி, ஆற்றல்களுக்கேற்ற வெளியீடு, ஆக்கத்திறன் போன்ற **Qurār Borsor - gold stars. 17uis.[ugs' - scholarship. i*grárGst-fist ops - initiative, 19 Guru-, - competition.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/188&oldid=777898" இலிருந்து மீள்விக்கப்பட்டது