பக்கம்:கல்வி உளவியல்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கல்வி உளவியல் கிரமிப்பு போன்றவற்றிற்கு இடம் இல்லாது போகின்றது. குழுச் செயல் களில் கூட ஒரு குழுவை மற்ருெரு குழுவுடன் போட்டியிடச் செய்து பயன் துய்க்குமாறு நம் பள்ளிப் பரிசில் திட்டங்களை அமைக்கலாம். எனவே, ஆசிரியர்கள் பரிசில் அளிப்பதன் குறைகிறைகளை அறிந்து ஏற்ற வாறு அவற்றை ஊக்கிகளாக மேற்கொள்ள வேண்டும். பரிசிலைவிட ஆசிரியரின் பாராட்டு பெரும்பலனை நல்கவல்லது. அது மாளுக்கரிடம் தொற்றுநோய்போல் பரவி அவர்களிடம் ஊக்கத்தை எழுப்பும் என்பது ஈண்டு கருதத் தக்கது. தண்டனைகள் : தண்டனைகளும் தண்டனைகளைப்பற்றிய அச்சமும் இன்றும் கம் பள்ளிகளில் ஊக்கு நிலைகளாக மேற்கொள்ளப்பெற்று வரு கின்றன. ஆயினும், அவை வரவரக் குறைந்தே வருகின்றன. அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவார் என்ற கொள்கையின் அடிப்படையில் இவை மேற்கொள்ளப்பெறுகின்றன. தண்டனைகளால் அடியிற்காணும் பலன்கள் விளைகின்றன என நம்பப்பெறுகின்றது. (!) குழந்தைக்கு ஆணையிடம் ஒரு மதிப்பை உண்டாக்குகின்றன. (2) விரும்பத்தகாத துலங்கல்கள் குழந்தையிடம் ஏற்படாமல் அடைத்துவிடுகின்றன. (3) ஒரு குழந்தை தான் செய்வதற்கு ஆயத்தமில்லாத அல்லது செய்வதற்கு விரும்பாதவற்றைச் செய்யுமாறு கட்டாயப் படுத்துகின்றன. (4) அடிக்கடி தவறு செய்வோர்களுக்கு எடுத்துக்காட்டாக அமை வதற்குக் காரணமாகின்றன. (5) மாளுக்கர்களை வகுப்பு வேலையில் கவனம் செலுத்தத் தூண்டு கின்றன. (6) கொடுக்கப்பெற்ற பொருளைக் கற்றுகொள்வதற்கு ஊக்கிகளாக அமைகின்றன. பரிசில்கள் இன் பத்தை அடிப்படையாகக் கொண்டவை; தண்டனை களோ பயத்தை அடிப்படையாகக் கொண்டவை. உடல்வலி, மனத் தவிப்பு, கேலி, இகழ்ச்சி, பதவியில் வீழ்ச்சி, மதிப்புக் குறைவு முதலிய வற்றைக் கொண்டு தண்டனைகள் ஊக்க முயலுகின்றன. இவை யாவும் எதிர்மறை ஊக்கிகள். இவை வலிமையானவையே. இவற்றிற்குப் பயந்து பலர் இடப்பட்ட வேலையைச் செய்கின்றனர். ஆனால், இவற்ருல் ஏற்படும் பயன் உண்மைப் பயன்தான ? இவற்றை எங்ங்னம் கையாளு தல் வேண்டும் ? என்ற விளுக்கள் எழுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/190&oldid=777904" இலிருந்து மீள்விக்கப்பட்டது