பக்கம்:கல்வி உளவியல்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்கு நிலையும் உள்ளக் கிளர்ச்சிகளும் #69 ஓர் எடுத்துக்காட்டைக்கொண்டு இதனை ஆராய்வோம். ஒரு மாளுக்கனின் அறிக்கை இது : “ கான் வெறுப்பவர் எனக்கு நான்காம் வகுப்பு ஆசிரியராக அமைந்தார். மறுநாள் 1-லிருந்து 9-ஆம் பெருக் கல் வாய்ப்பாடுவரை ஒப்புவிக்காவிட்டால் உன்னை சுழித்துவிடுவேன்; மேல் வகுப்புக்குப் போக முடியாது என்று ஒருநாள் என்னிடம் கூறினர். அப்பொழுது வகுப்பில் தவறுதல்’ என்ற கருத்து எனக்கு மிகவும் பயங் கரமாக இருந்தது; ஆகவே, இரவில் கெடுநேரம் கண்விழித்து அவற்றை கெட்டுருச் செய்தேன். வகுப்பில் தவறினுல் பெற்றேர்களிடமும் வகுப்புத் தோழர்களிடமும் எங்ங்ணம் முகத்தைக் காட்டுவது என்ற பயத் தால் அன்றிரவு கண்விழித்தேன். இந்த ஒரு காரணத்தால் நான் இன்னும் கணக்கை அதிகமாக வெறுக்கின்றேன். எண்களால் நிரம்பிய பக்கத் தைப் பார்க்கும்பொழுதெல்லாம் அந்த ஈர்ப்பு உணர்ச்சி என்னிடம் எழுகின்றது." இந்த எடுத்துக்காட்டிலிருந்து பயமுறுத்தலால் ஏற்படும் இரண்டு விளைவுகளை அறிகின் ருேம். ஒன்று: பயமுறுத்துதல் இக்குழந்தைக்கு வன்மையான ஊக்கியாக அமைந்தது; பெருக்கல் வாய்ப்பாட்டைக் கற்ற துடன் வேறு பலன்களையும் விளைத்தது. இரண்டு: ஆசிரியரிடமும் அவர் கற்பித்த கணக்குப் பாடத்திட்டத்திலும் வெறுப்பு ஏற்பட்டது. இவை இரண்டும்கூட படிப்பினைகளே. இதனுல்தான் பல உளவியல் அறிஞர்கள் தண்டனைகளைக் கையாளலாகாது என உரைக்கின்றனர். தண்டனை களால் விளைவதாக அவர்கள் கூறும் பலன்கள் வருமாறு : (1) தண்டனை தருவோரிடம் வெறுப்பையும்?? பகைமையையும்' உண்டாக்குகின்றன. (2) பெரும்பாலும் அதிகப்படியான உள்ளக்கிளர்ச்சியின் காரண மாக எந்தவிதமான கற்றலும் குழந்தையிடம் நேரிடாது போகக் காரணமும் உண்டு. (3) கற்க வேண்டிய பொருளைக் கற்பதிலிருக்கும் ஆர்வத்தைவிட எப்படியாவது தண்டனையிலிருந்து தப்புவதற்காகக் கற்கவேண் டும் என்ற எண்ணமே மீதுர்ந்து நிற்கின்றது. (4) மனக்கவலையால் விளையும் ஈர்ப்பின் காரணமாக சோர்வு அல்லது களைப்பு: அதிகமாக நேரிடுகின்றது. (5) வகுப்பு:அமைதி சிதைகின்றது. ao @sugüu - resentment. 21 usms.onta - hostiiity. ** tosrässuão - anxiety. 9 s sarúti, Gs risi - fatigue

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/191&oldid=777906" இலிருந்து மீள்விக்கப்பட்டது