பக்கம்:கல்வி உளவியல்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கல்வி உளவியல் பரிசில் கல்குவதில் நல்ல வேலைக்கும் இன்பத்திற்கும் தொடர் புறுத்தி ஊக்கம் ஏற்படுத்த முயல்கின்ருேம்; தண்டனையில் தவருன வேலைக்கும் துன்பத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி அந்த வேலையை அகற்ற முயலுகின்ருேம், தவருண வேலைக்கும் வலிக்குமுள்ள தொடர்பு இயற்கை யானதன்று. மாளுக்கன் வலிக்கு ஆயத்தமாயிருந்தால், குறிப்பிட்ட தவருன செயல் அகற்றப்பெருது. சிலசமயம் தண்டனை பயன்தரலாம்; அதற்கு வாய்ப்பும் உண்டு. ஆனல், பெரும்பாலும் தவறென்பதை உற். றறியாமல் தவறுசெய்வதும், எப்படியாவது கண்டுபிடிக்காம லிருக்க வேண்டும் என்ற நோக்கமும் வந்து விடுகின்றது. ஆகவே, தண்டனை கிலே யான பயன் அளிப்பதில்லை. ஆசிரியருக்குக் குறிப்பு : தண்டனைகளால் ஏற்படும் விளைவுகள் எங்ங்ணம் குழந்தையின் நடத்தையை மாற்றுகின்றன என்பதை ஆசிரி யர்கள் அறிதல் வேண்டும். இவை கிலேமைக்கு கிலேமை மாறுபடும். அடியிற்காணும் குறிப்புக்கள்ஆசிரியர்களுக்கு வழிகாட்டிகளாக அமையும். (1) ஆசிரியர்களுக்கும் மாளுக்கர்களுக்கும் இடையே நிலவும் சமூக உறவு முறை தண்டனையின் விளைவுகளை அறுதியிடும். மாளுக்கர்களால் விரும்பப்பெருத ஆசிரியரிடம் தோன்றும் சிறுகண்டனமும்” பெரிய அதிேயாகத் தோன்றும். {2} குழந்தைகளிடமும் ஆளுமை' வேற்றுமைகள் உண்டு. அவற்றிற்கேற்ப ஆசிரியர் தண்டனைகளைக் கையாளும் யுக்தி முறைகள் பல்வேறு அளவுகளில் விளைவினை உண்டாக்கும். ஓர் ஆராய்ச்சியினுல் திட்டுதலினுல் புறமுகர்கள்’ அதிக முயற்சியுடன் துலங்கினர் என்றும், அகமுகர்கள்’’ திட்டுதலி ளுல் முன்னேற்றத்தில் அதிகமாகப் பாதிக்கப் பெற்றனர் என்றும் தெரிகின்றது. (3) குழந்தை தண்டனையைப் பற்றிக்கொண்டுள்ள கருத்தினையும் ஆசிரியர் மதிப்பிட வேண்டும். தண்டிக்கும்போது ஆசிரியர் மகிழ்ச்சியடைதல் கூடாது. "தண்டிக்க நேரிடுகின்றதே, வேறு வழி இல்லையே ' என்று வருந்துவதாகக் காட்ட வேண்டும். இடும் தண்டனையும் தவறுக்கு ஏற்றதாக இருத்தல் வேண்டும். அது செயலின் விளைவு என்று தோன்றவேண்டும். அதே போன்ற சந்தர்ப்பங்களில் ஒரேவிதமாகவும் உறுதியாகவும் இருத்தல் வேண்டும். விலக்குக்கு இடந்தருதல் கூடாது. ** 48ir-sario - reprimand. * 5 ges&oud - personality 26 fili656 - reproof. *? upgp&it - extravertis. * 8 3sgpsit - intravertis.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/192&oldid=777908" இலிருந்து மீள்விக்கப்பட்டது