பக்கம்:கல்வி உளவியல்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霞72 கல்வி உளவியல் வெகுளி : வெகுளி என்பது ஏதேனும் ஒரு தடைதோன்றி நம் செயலைச் சிதைக்கும்போது எதிருன்றலாக எழும் ஓர் உள்ளக் கிளர்ச்சி யாகும். அது தனித்தோ மற்றவற்றுடன் சேர்ந்தோ தோன்றுகிறது. பொருமை, துக்கம் முதலிய நிலைகளில் வெகுளி ஒரு கூருகவும் அமைக் துள்ளது. தடை மிக்கு வருமாயின், வெகுளியே அச்சமாக மாறுவதும் உண்டு, துணிகட்டுதல், உடையணிதல், உடைகழற்றல், குளித்தல், உறங்கப் போதல் என்ற பலவகைச் செயல்களிடையேயும் பிறர் வந்து இடை புகுந்தால், சிவவழிபாட்டில் கரடி புகுந்ததாகக் கருதிக் குழவி வெகுண்டு வீழ்கின்றது. வெகுளியின் வடிவம் : குழவியிடம் வெகுளி தோன்றும் வடிவினை யும் காம் அறிவோம். மேலும் மேலும் குதிப்பது, உதைத்துக் கொள்வது, தரையைக் காலால் தட்டுவது, தரையில் வீழ்ந்து புரள்வது, ஒன்றும் செய்யாமல் விறைத்து நிற்பது, உண்ண வாய் திறவாது இறுக மூடிக் கொள்வது, பேச்சுக் கற்றுக்கொண்டபோது மறுத்துரையாடுவது, குள் உரைப்பது, வைவது-இவ்வாறெல்லாம் குழந்தையிடம் வெகுளி வெளிப் படக் காண்கின் ருேம். இந்தச் சிக்கலற்ற நிலையிலிருந்து பல சிக்கலான நிலைகள் ஏற்படு கின்றன. கடந்து செல்லும்பொழுது முள், கல், கண்ணுடி போன்ற ஊறு விளைவிக்கும் பொருள்களிருப்பின் எரிச்சல் உண்டாகின்றது. நாளடை வில் உண்மைத்தடைகளுடன், தடையாகத் தோன்றுபவையனைத்தும் சினத்தை' எழுப்பிவிடும். தான் போடும் திட்டத்திற்கு ஊறுவிளக் தாலும், தன் புகழ், தன் விருப்பம் ஆகியவற்றிற்கு இடைஞ்சல் ஏற்படி னும் கோபம் உண்டாகும். பள்ளியில் ஆற்றலுக்கு மீறிய வேலை தரப் பெறினும், வேலையை நெடுநேரம் செய்ய நேரிடினும், ஆசிரியர் ஒருதலைச் சார்பாக நடப்பதாகத் தோன்றினும், அவர் முரணுன கட்டளையிடினும் அல்லது பிறருடன் ஒப்பிட்டு ஏளனம் செய்தாலும் அல்லது குறைகூறி லுைம், கிண்டலாகப் பேசினலும் குழந்தைகள் கோபங் கொள்வர். மற்றும், சில குழந்தைகள் பள்ளிக்குவந்த பின்னர் இரகசியம் பேசு வர்; இரைச்சல் போடுவர் ; குறும்பு செய்வர்; பள்ளிக்கு வராமல் ஒளிந்து திரிவர் ; கோள்சொல்வர்; கற்பனையாற்றல் வளர்ந்துவிட்டால் பல முறைகளில் பழிக்குப் பழிவாங்கும் வழிவகைகளை யோசிப்பர்; கட்சி கட்டி வீம்புக்காகப் பலதுறைகளில் இயங்குவர்; ஆசிரியரிடம் சினங் கொண்டு பள்ளிதட்டுமுட்டுச் சாமான்களுக்குச் சேதம் விளைப்பர். ஆசிரி வர்கள் விழிப்புடனிருந்து இவற்றைச் சமாளிக்கவேண்டும். 84 சினம், வெகுளி- anger.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/194&oldid=777912" இலிருந்து மீள்விக்கப்பட்டது