பக்கம்:கல்வி உளவியல்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்கு நிலையும் உள்ளக் கிளர்ச்சிகளும் Í 73 வெகுளியைத் தூண்டும் நிலைகள் : சில ஏதுக்கள் சினத்தை அதிகப்படுத்தும். பசித்து வாடும்பொழுதும், களத்து மெலிந்துகிடக் கும்பொழுதும், நோயால் வருந்தும்பொழுதும், தூக்கமின்மையாலும் வெகுளி எளிதில் பொங்கி வழியும். இவை யாவும் வெகுளி கொழுந்து விட்டு வளரத்தக்க செழித்த வயல்களாகும். பொதுவாக வெகுளி வலியின்மையையே காட்டும். எனவே, ஒரு வாறு அவாவிற்கும் ஆற்றலுக்கும் உள்ள இடையீடு அதிகமானல் அவர் எளிதில் சினங்கொள்வர். சினத்தைச் சமாளிக்கும் முறை : மேற்கூறியவற்றிலிருந்து வெகுளி கிலேகளை நாம் நன்கு அறிவோம். வெகுளியை விளைவிக் கும் நிலைகளைக் குறைக்கும் வழிவகைகளை மேற்கொண்டால் வெகுளியை ஒருவாறு கட்டுப்படுத்திவிடலாம். நோய்நாடி கோயின் குணம் நாடி அதுதணிக்கும் வாய்காடி வாய்ப்பச் செயல்.: என்ற வள்ளுவர் வாக்கிற்கொப்ப கோபத்தின் காரணத்தை அறிந்து அதைவிலக்க ஆயத்தமாக இருப்பதாகக் காண்பித்தல் சிறந்த உளவியல் முறையாகும். பள்ளிகளில் ஆசிரியர்கள் அவசியமற்ற தடைகளை ஏற்படுத்தக் கூடாது; பயன்தராத கட்டுப்பாடுகளே நீக்க வேண்டும். மிகக் கடின மான வேலைகள் தருதல், சலிப்பையும் அலுப்பையும் உண்டாக்கும் பயிற்சிகள், உயிரற்ற உற்சாகமற்ற தொல்லையான வேலைகள், விணுக மாளுக்கர்களை வகுப்பறையில் இருக்கச் சொல்லுதல் போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும். பிறருக்குச் சினம் ஏற்படாது தடுக்க முயல்வதற்குமுன்னர் நம் சினத்தை அடக்கிக் கொள்வது சாலச் சிறந்தது. சொல்லுவது யார்க்கும் எளிது ; ஆளுல் சொல்லியவண்ணம் செயல் அரிது. வெகுளி நிலையைக் கடந்த பின்னர் அமைதியாக ஆராய்ந்தால், உண்மை புலணுகும் : பிறர் செயலேவிட கம்மன கிலேயே அதற்குக் காரணம் என்பதை அறிவோம். சினம் எழுவதற்குக் காரணம் ஆற்றலின்மையே. ; எனவே, திறன்களே வளர்த்துக்கொண்டு சமாளிக்கும் நிலைமையை உண்டாக்க வேண்டும், சினம் கொண்டவரிடமுள்ள நல்ல கூறுகளை ஒப்புக்கொண்டால் கொடுமை குறைந்து நல்லுணர்ச்சி ஏற்படலாம். சிலவற்றில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உண்டாயின், மற்றவற்றினும் சமரசம் ஏற்பட வழியுண்டு. ஏதோ காரணத்தால் சிடுசிடு' என்று முகத்தை வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/195&oldid=777914" இலிருந்து மீள்விக்கப்பட்டது