பக்கம்:கல்வி உளவியல்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 கல்வி உளவியல் கொண்டிருக்கும் மனைவியின் சினத்தைத் தணிக்கக் கணவன் அவளது அட்டில் தொழிலை மெச்சுவதுபோல, ஆசிரியரும் ஓரிடத்தில் தண்டனை பெற்றதால் வெறுப்படைந்துள்ள மாளுக்கனை, மற்ருெரு நிலையில் அன் போடு பேசி அனைத்துக் கொள்ள வேண்டும். இவ்விடத்தில் இராம லிங்க அடிகள் அருளியுள்ள “தடித்த ஓர்மகனை'*' என்ற பிள்ளைச்சிறு விண்ணப்பப் பாடலைச் சிந்தித்தல் சாலப் பயன்தருவதாம். வெகுளியின் பயன் : வெகுளியாலும் பயன் உண்டு. வெகுளி சோம்பலைப் போக்குகின்றது; தன்னைத்தானே சோதித்துத் திருத்திக் கொள்ளப் பயன்படுகின்றது. பிறர் நோக்கத்தை அறிவதற்கும் வாய்ப் பளிக்கின்றது, அச்சம் 7: அச்சமும் முக்கியமான உள்ளக் கிளர்ச்சிகளில் ஒன்று. வெகுளியைப் போலவே அச்சத்திலும் பலவகை கிலைகள் உள்ளன. தனி யாள் சரியான நிலையில் இயங்கித் தப்பித்துக் கொள்ள இயலாத அபாய நிலைகளிலும், அபாயம் என்று ஒருவர் எண்ணும் நிலைகளிலும் அச்சம் எழு கின்றது. அபாயத் துண்டல்கள் நீங்கிய பிறகும், அங்கிலைகளைச் சமாளிக் கும் திறன்களைப் பெற்ற பிறகும் அச்சம் நீங்கும். அச்சம் எழும் காரணங்கள் : அச்சம் பெரும்பாலும் பழக்கத்தால் எழுந்ததேயன்றி இயற்கை அன்று என்று உளவியலார் கூறுகின்றனர். ஆனல், வாட்சன் என்ற அறிஞர் பிறந்தது முதல் குழவிகளை ஆராய்ந்து அச்சம் விளைவிப்பவை யாவை எனக் கண்டு விளக்கியுள்ளார். திடீர் என்று உறைப்பாக எழும் தூண்டல்கள் அச்சத்தினை எழுப்புகின்றன வாம். குழந்தைப் பருவத்தில் புேரொலி, திடீரென்று எழும் பேரொலி, திடீர் நிகழ்ச்சிகள், பிடித்துக் கொண்டிருக்கும் குழந்தையைக் கீழே விட்டு விடுதல்போல் செய்தல், தாங்கல் நீங்குதல் (loss of support) முதலியவைகள் அச்சத்தைத் தூண்டுபவை. இவற்றிலும் குழந்தைகளுக் கிடையே தனி வேற்றுமை உண்டு. ஒரே குழந்தை வெவ்வேறு நிலை களில் வெவ்வேறு முறையாகத் துலங்கலாம். பல பருவ நிலைகளில் அச்சம் : குழந்தையின் இயக்கங்களும் பட்டறிவும் மிகமிக அச்சத்தை விளைவிக்கும் பொருள்களும் நிகழ்ச்சி களும் மாறுபாடு அடைகின்றன. முதலில் அச்சம் விளைவிக்காதவை பின்னர் அச்சமுறுத்துகின்றன ; முன்னர் பயமுறுத்தியவை பின்னர் பயமுறுத்துவதில்லை. இருட்டு, விலங்குகள், மருத்துவர், குடுகுடுப் பாண்டி, பாம்பு போன்றவை சிறுவர்கட்கு அச்சத்தை விளைவிக் 38 திருவருட்யா - பிள்ளைச் சிறுவிண்ணப்பம் - பா. 1. 37 #ịả 5ứ - fear. 3 8 suirt-ỡ $r - Wat,8on.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/196&oldid=777916" இலிருந்து மீள்விக்கப்பட்டது