பக்கம்:கல்வி உளவியல்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும் 177 கொண்டு உணவு அளிக்கச் சொல்லியும், பிச்சைக்காரனைப் பாடச்செய் தும் பயத்தைத் தெளிவிக்கலாம். இருட்டறையில் பயந்து நடுங்கும் குழந்தையை, இருட்டறையில் விளக்கேற்றியும், அங்கே தங்கி அவனைப் பிடித்துக் கொண்டும், கதை சொல்லியும் அச்சத்தைக் களையலாம். குழி முயலைக் கண்டு அஞ்சிய குழந்தையின் பயத்தை யொழிக்க வாட்சன் என்ற ஆய்வாளர் இவ்வாறு செய்தார் : குழந்தை மேசையின் ஓர் ஓரத் தில் மகிழ்ச்சியுடன் உண்டுகொண்டிருக்கும்பொழுது மற்ருேர் ஒரத்தில் குழிமுயலை வைத்தார். முதலில் குழந்தை சிறிது திடுக்கிட்டது; ஆளுல், மகிழ்ச்சிதரும் உண்ணுதலுடன் இயைபு பெற்றதால் அச்சம் குறை வாகவே இருந்தது. நாடோறும் இங்ங்னம் செய்யப்பெற்று, ஒவ்வொரு காளும் முயல் அண்மையில் சிறிது சிறிதாகக் கொண்டு வரப்பெற்றது. சின் னுட்கள் கழிந்ததும் குழந்தை முயலுடன் விளையாடிக் கொண்டே உணவை உண்டது. குழந்தைகளிடம் நயமாகப் பேசுதல் அவசியம். மூத்தோர் ஆதரவு தனக்கு இருப்பதையும் அதை எப்பொழுது வேண்டு மானுலும் பெறலாம் என்பதையும் குழந்தை உறுதியாக அறிந்தால் குழந்தையிடமிருந்து பலவித அச்சங்கள் அகலும். சற்று வளர்ந்தவர் களிடம் சிந்தனையையும் அறிவையுங் கொண்டு அச்சத்தைத் தெளிவிக்க லாம். பாடங்களை அவற்றின் கடினத்துக்கேற்றவாறு கிரல்படுத்தினுல், பாடங்களைப்பற்றிய அச்சம் அகலும்; தன் மதிப்பும் துணிச்சலும் உறுதிப் படும். கிலைமையைச் சமாளிக்கும் செயலாற்றலே அச்சத்திற்குத் தக்க மருந்து. இத் திறனைப் பெறவேண்டுமானுல் அபாய கிலைமையை காம் நன்கு உணர வேண்டும். ஓர் உண்மை : வெகுளியிலும் அச்சத்திலும் பங்கு கொண்டு கடத்தையைத் தூண்டுவது மாங்காய்ச்சுரப்பி. இச் சுரப்பியில் ஊறும் சாறு குருதியில் பாய்ந்ததும் தசைகள் யாவும் சுறுசுறுப்பாக முறுக்கேறி கிற்கின்றன ; குருதியீரல்* விரைந்து துடிக்கின்றது ; நுரையீரலும் விரைந்து மூச்சு விடுகின்றது; களைப்பு நீங்குகின்றது. மண்ணிரல்,** கல்லீரல், குடல்4 முதலியவற்றில் அடைபட்டுக் கிடக்கும் குருதி வயிற்றிலிருந்து உடலெங்கும் பாய்கின்றது. உடற்சூடு மிகுதியாகின்றது. மயிர்க்கூச்செறிதலை நாம் காண்கின்ருேம், கல்லீரலில் அடங்கிக் கிடக்கும் கன்னற் குழம்பு குருதியில் பாய்ந்து தோல் முழுவதும் நெய்ப் பசை பரவுகின்றது. இப்பொழுது வெகுண்டு எழுவதற்கும் வெருண்டு ஓடுவதற்கும் உயிரி ஆயத்தமாக இருக்கின்றது. 41 Gößlogs) - heart.: 42 loorsons - pancreas. * * *ētorio -liver. 44 €5L& - intestine3. க.உ.12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/199&oldid=777921" இலிருந்து மீள்விக்கப்பட்டது