பக்கம்:கல்வி உளவியல்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கல்வி உளவியல் இன்பம்' : இன்ப ஆக்கமும் துன்ப நீக்கமுமே மானிட வாழ்க்கை யின் முடிந்த பொருள் என்று அறிஞர் கூறுவதை நாம் கேள்வியுற்றிருக் கின்ருேம். உவகையும் நகைமுகமும் அனைத்திற்கும் அடிப்படை என்பது வள்ளுவப் பெருந்தகையின் கொள்கை. இன்பத்திலும் பல நிலை கள் உண்டு ; அளவுகள் உண்டு. சிலவகையான செயற்பாடுகள் நிகழும் போது இன்பம் அவற்றை யொட்டிய அனுபவமாகவே விளங்குகின்றது. குழந்தைகளிடம் இன்ப உணர்ச்சி: இன்ப உணர்ச்சி குழந்தை களிடம் எங்ங்னம் விளங்குகின்றது ? அதன் உடல் வேறுபாடுகளைக் கொண்டே நாம் ஒரு முடிவிற்கு வரவேண்டும். இன் பத்தின் அறிகுறி கள் என நாம் நம்புவனவற்றைக் கொண்டே இன்பம் உண்டெனத் துணி தல் வேண்டும். நாம் நேரில் காண்கிறபடி குழந்தைகள் செயல்களிளுல் தான் இன்பமுறுகின்றனர். சிறு பருவத்தில் கைகளையும் கால்களையும் ஆட்டிப் பலவிதக் குரல்களே எழுப்பி இன்பம் பெறுகின்றனர். சமூகத் தொடர்புகளும் குழந்தைகட்கு இன்பம் அளிப்பவை. வயது ஆக ஆக கற்பனைத் திறன்களையும் சிந்தனையையும் பயன்படுத்தி இதனிலும் உயர் நிலை இன்பம் துய்க்கின்றனர். குழந்தைப் பருவத்தில் இன்பம் தந்த பல பொருள்கள் பிள்ளைப் பருவத்திலும், பிள்ளைப் பருவத்தில் இன்பம் தந்தவை குமரப் பருவத்திலும் இன்பம் தருவதில்லை. ஐந்து வயதுக் குழந்தை கிலுகிலுப்பை, சிறுதேர் முதலியவற்றை விரும்புவதில்லை. அதே குழந்தை கைவேலைகள் பல வற்றிலும், ஓவியம் வரைவதிலும் இன்பம் காண்கின்றது. இங்ங்னமே ஒவ்வொரு வயதிலும் இன்பப் பொருள்கள் மாறுபடுகின்றன. கல்வித்துறையில் இன்பத்தின் பங்கு : மாணுக்கன் தான் இயற் றும் செயலை எஞ்ஞான்றும் விரும்பவேண்டுமாயின் பாடத்திட்டத்தி லுள்ள செயல்களை கடினத்திற்கேற்றவாறு நிரல்படுத்தி அமைக்கவேண் டும். எந்த நிலையிலும் மாளுக்கன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல் கள் இருத்தல்கூடாது ; இதல்ை ஊக்கம் குன்ருது மாளுக்கன் முன்னேற லாம். நடைமுறையில் எல்லாச் செயல்களையும் இங்ங்ணம் அமைத்தல் எளிதன்று. அன்றியும், தவறுகளையே காணுமல் வளர வாய்ப்பளித்தலும் கன் றன்று. எனினும், போதிய அளவு இன்பம் பெறுமாறு பள்ளிச்சூழ் கிலே அமைந்தால் போதுமானது. தினவு எடுக்கும் கைகளுக்கும், துரு துருவென்று அலையும் கால்களுக்கும், மலர்ந்துவரும் சிந்தனைக்கும் ஏற்ற வாய்ப்புக்கள் தரவேண்டும். உயிரற்ற வேலையைத் திரும்பத் திரும்பச் 48 &south - pleasure.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/200&oldid=777925" இலிருந்து மீள்விக்கப்பட்டது