பக்கம்:கல்வி உளவியல்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 கல்வி உளவியல் நோக்கங்களுள் ஒன்று உள்ளக்கிளர்ச்சிகளுக்கு நேராக முறையீடு செய்தல் ஆகும். சுவையறிவை வளர்க்கும் வகையில் உள்ளக்கிளர்ச்சி களைக் கையாளுவது சாலப் பயன்தரும். மாணுக்கர்களிடம் சுவையறிவை எங்ங்ணம் வளர்ப்பது ? இதனை மனத்தின் முந்நிலைகளாகிய உணர்ச்சிகிலே*9, அறிதல்நிலை”, இயற்றி கிலை ஆகியவற்றின் அடிப்படைகளில் ஆராய்வோம். முதலாவது உணர்ச்சி நிலை: சுவை வளர்ச்சியில் இந் நிலைதான் மிகவும் முக்கியமானது. எதையும் சரியாக உணரும் நிலையை மாளுக்கர் களிடம் வளர்க்கவேண்டும். சிறு குழந்தைகளிடமே முருகுணர்ச்சி அமைந்து கிடக்கின்றது. இந்தப் பொம்மை அழகாக இருக்கின்றது, அந்தப் பொம்மை அழகாக இல்லை என்பன போன்ற குழந்தைகளின் கூற்றுக்களிலிருந்தே இதனை அறியலாம். இசையில் இன்பத்தையும், அழகான பொருள்களின் வனப்பையும், பாடல்களின் சொற்சுவையையும் பொருட் சுவையையும், கட்டடங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற வற்றையும், இயற்கை அழகையும், ஆண்டவன் படைப்பு மேன்மையை யும் மாளுக்கர்கள் துய்ப்பதற்கு வாய்ப்புக்கள் தரவேண்டுமென்பது இன்றைய கல்வியின் கோக்கம். அழகு மனிதனது உயர்ந்த வெளியீடு என்பதை மறத்தலாகாது. தமிழ்மக்களது அழகுணர்ச்சியே-முரு குணர்ச்சியே-முருகன் என்ற கடவுள் வடிவம் பெற்றது என்பது ஈண்டு சிந்திக்கற்பாலது. பள்ளிச்சூழ்நிலை, வகுப்புச்சூழ்நிலை, விழாக்காலங் களில் பள்ளியை அணி செய்யும் முறை, பள்ளியமைதி, ஒழுங்குமுறை போன்றவை மாளுக்கர்களுக்கு அழகுச்சுவையை உணர வாய்ப்புக்கள் தரும். இசையில் பயிற்சியும் கவிதைகளிலுள்ள உணர்ச்சிக் கூறினே எடுத்துக் காட்டலும் இதற்குப் பெருந்துணை புரியும். இரண்டாவது அறிதல்நிலை: இதில் ஆசிரியர் மிக விழிப்பாக இருக்க வேண்டும். இது அழகுள்ளது, அது அழகற்றது என்று ஆசிரி யர் தம் கருத்தினை மாளுக்கர்பால் வலிந்து திணித்தல் கூடாது. பொருள் கள் அழகாக இருப்பதற்கும் சில கூறுகள் உள. அவற்றை மாளுக்கர் களே காணும்படி செய்தல் வேண்டும். ஒரு குழந்தை ஒரு பொருளின் அழகை உணர்தலுடன் மனநிறைவு பெற்ருல், அதை அப்படியே விட்டு விடவேண்டும் ; அதைப்பற்றிக் கூறவோ, காரணங்கள் தருமாறு கட்டா யப்படுத்தவோ கூடாது. சுவையறிவுக் கல்வியில் நேர்முறைக் கற்பித்தல் 8 o a sorão flæ - affection. 51 gogo flā) - cognition. **@ujo istão - conation.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/204&oldid=777933" இலிருந்து மீள்விக்கப்பட்டது