பக்கம்:கல்வி உளவியல்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்குகிலேயும் உள்ளக்கிளர்ச்சிகளும் 185 இந்த உள்ளக்கிளர்ச்சிகளை எங்ங்னம் கட்டுப்படுத்துவது? மூன்று முறைகளால் இவற்றைக் கட்டுப்படுத்தலாம். முதலாவது: உள்ளக்கிளர்ச்சிகளை நசுக்கி அவற்றிற்கு இடங் தராது செய்தல். முற்காலத்தில் இம்முறையே மேற்கொள்ளப் பெற்றது. இதற்கு முன்னேர்கள் ஒறுத்தல் முறையை (தண்டோபாயம்) கையாண்ட னர். அடக்குமுறைக்குச் சிறிது இடம் இல்லாமல் இல்லை. சிறுவன் பள்ளி செல்லல், மருந்து உட்கொள்ளல், பற்களைத் துலக்கல், பள்ளிவிதி களைப் பின்பற்றுதல் போன்ற நற்செயல்களைச் செய்யத்துண்டுவதில் இவ் வடக்கு முறை பயன்படுகின்றது. இச்செயல்களின் மிக்க இன்றியமை யாமையை விளக்கிக் காட்டிய பிறகே அவற்றைச் செய்யும்படி வற்புறுத்து கின்ருேம். என்ருலும், மிதமிஞ்சிய அடக்குமுறை கேடான நிலைக்குக் கொண்டுசெலுத்தும். உலக வரலாற்றில் இதற்குப் பல சான்றுகளைக் காணலாம். சிறுவர்களின் உள்ளக்கிளர்ச்சிகளே நசுக்கினுல் அவர்கள் வலுச்சண்டைக் காரர்களாக மாறலாம் ; அல்லது பிறரை வருத்தும் கொடியவர்களாக மாறலாம் : அல்லது முற்றிலும் தன்னம்பிக்கை இழந்த பயனற்ற பதர்களாகப் போகலாம். உயர்வுச்சிக்கல் , தாழ்வுச்சிக்கல் போன்ற கோளாறுகள் அவர்கள்பால் நிரந்தரமாக அமைதலும் கூடும். எனவே, தண்டனையால் ஒன்றையும் சாதித்துவிட முடியாது. எவ்வாற்ருனும் உள்ளக்கிளர்ச்சிகளைச் சிதைத்தல் முடியாது. மேற்பரப்பில் இவை தலைகாட்டாவிடினும், உள்ளேயே கனிந்துகொண்டு இருக்கும். வாய்ப்பு வருங்கால் விரும்பத்தகாத முறையில் பல பிரச்சி னைகளே விளைவிக்கும். வீட்டிலும், பள்ளிகளிலும், அரசியலிலும் தோன்றும் பல பிரச்சினைகளுக்கு இவ்வடக்கு முறையே காரணம் ஆகும். மேற்பரப்பில் தோன்ருமல் உள்ளேயே உறைந்து கிடக்கும் குருதிக் கட்டி புரையோடி பல கோளாறுகளை விளைவித்தல் இவ்விடத்தில் கருதற்பாலது. எனவே, ஆற்றுநீரினை அனபோட்டுத் தேக்கிலுைம், வடிகால்கள் இருக்க வேண்டுவது இன்றியமையாதது போலவே, உள்ளக் கிளர்ச்சி செயற்படுவதற்கும் வாய்ப்புக்கள் தரப்பெறுதல் வேண்டும். இரண்டாவது: மேற்கூறியோருக்கு நேர்மாறக வேறு சிலர் உள்ளக் கிளர்ச்சிகள் செயற்படுவதற்கு முழுவாய்ப்புக்களை கல்க வேண்டு மெனக் கூறுகின்றனர் ; சிறுவர்களின் தன் நோக்கத்தைச் சிறிதும் தடுத்தலாகாது என்பது இவர் கொள்ளும் முடிவு. நடைமுறையில் இக் கொள்கை சிறிதும் பயன்படுவதில்லை. உள்ளக்கிளர்ச்சிகள் அனைத் s7 o uñas áge superiority complex, se srae ossi - inferiority complex.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/207&oldid=777939" இலிருந்து மீள்விக்கப்பட்டது