பக்கம்:கல்வி உளவியல்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 கல்வி உளவியல் திற்குமே அளவு கடந்து இடங் தருவதால் எல்லையற்ற தீங்குகள் நேரிடும்; நமது நாகரிகத்தின் பல சிறப்பான கூறுகள் அழிந்துபடும். காதலுக்கம், போரூக்கம் போன்றவற்றிற்கு முழு உரிமை யளித்தால் யாது நேரிடும் என்பதை உன் னிப்பார்த்தால் உண்மை புலனுகும். விலங்குகளுக்கும் மனிதனுக்கும் வேற்றுமை இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்பதை நாம் எளிதில் உணரலாம். எனவே, இம்முறையாலும் பயன் இல்லை. மூன்ருவது : சிறந்ததாக கருதப்பெறுவது உள்ளக் கிளர்ச்சிகளைத் தூய்மை செய்தல் அல்லது உயர்மடைமாற்றம் செய்தல் ஆகும். இதனைத் தனியே சற்று விரிவாக ஆராய்வோம். தூய்மை செய்தல் கீழ்கிலச் செயலை மேல்கிலேச் செயலாக மாற்றுவதே தூய்மை செய்தல் ‘*’ என்பது. இதனை உயர்மடை மாற்றம் என்றும் வழங்குவர். உள்ளக்கிளர்ச்சிகள் யாவும் தற்காப்பு நோக்குடையவை ; நாகரிக வாழ் வில் அவை ஒன்ருேடொன்று முரண்படுகின்றன. சமூக வாழ்க்கைக் கேற்ப அவற்றை நல்வழியில் மாற்ற வேண்டும். அஃதாவது, அவற்றின் இயல்பான நோக்கத்தை மாற்றியமைத்து அவற்றைத் திருப்தி செய்தல் வேண்டும். அவற்றை கசுக்கவும் செய்யாது, அவற்றிற்கு முழு உரிமை யும் அளிக்காது மடைமாற்றி வேறு பயன்தரும் போக்குகளில் திருப்பி விடுதலே தூய்மை செய்தல்’ என்பதற்கு முழுவிளக்கம் ஆகும். பிராய்டு கொள்கையினைப் பின்பற்றுவோர் முதன் முதலில் இம்முறையினைக் காத லூக்கத்திற்குமட்டிலும் மேற்கொண்டனர். ஆனால், நாளடைவில் பிற இயல்பூக்கங்களுக்கும் இது பயன்படுகின்றது. இயற்கை ஆற்றலை மனநிலை ஆற்றலாக ஆக்கும்பொழுது மக்கட்கூட்டம் விரும்பும் வகையில் மாற்றுதல் வேண்டும். இந்த ஆற்றலை மக்களுக்குப் பயன்படும் வழியில், படைப்பு கிலே ஆற்றலாக மாற்றுவதே நாகரிகத்தின் கடமையாகும். சில எடுத்துக்காட்டுக்கள் இதனைத் தெளிவாக்கும். போரெனப் புயங்கள் வீங்குவது தோள்வலியை வெளியிடும் இயற்கையாற்றல். இதன் விளைவுகளைக் கடந்த இரண்டு போர்களிலும் கண்டோம். போரில் சென்று பாய்ந்து நாசவேலை செய்யும் இவ்வாற்றலை உணவுபற்ருக்குறை, பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண் டாட்டம், சமூகச் சீர்திருத்தம், காட்டில் நிலவும் எழுத்தறிவின்மை போன்ற சமூகப் பிரச்சினைகளை எதிர்த்துச் சமாளிக்கும் வழியில் திருப்ப லாம். இம்முறையில் போரூக்கம் சிறந்த முறையில் பயன் அளிக்கின்றது.

  • o širius nuo Gælists - sublimation.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/208&oldid=777942" இலிருந்து மீள்விக்கப்பட்டது