பக்கம்:கல்வி உளவியல்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும் 187. சிறுவர்களிடம் இயல்பாகக் காணப்பெறுவது விடுப்பு" அல்லது ஆராய் ஆக்கம். எதையும் ஆராய வேண்டும் என்ற அவாவுடன் உள்ள சிறுவர் களைப் பிறர் பையில் கையோடுதல், பிறருடைய அஞ்சற் கடிதங்களைப் படித்தல், கதவு இடுக்குகளின் மூலம் உற்றுப் பார்த்தல், உள்ளே பேசும் செய்திகளை மறைந்து நின்று ஒட்டுக் கேட்டல் போன்ற செயல்களில் செல்லவிடாமல் அறிவியல் ஆராய்ச்சியில் திருப்பிவிடவேண்டும். எல்லா அறிவியல்களும் வியப்புச் சுவையினின்றும் பிறந்தவையே; தற்கால அறி வியல் முழுவதும் உயர்மடைமாற்றம் செய்யப்பெற்ற விடுப்பூக்கத்தி னின்றும் எழுந்ததே. இங்ங்ணமே உடலுக்கு ஊறு விளையும் என்ற அச்ச உணர்ச்சியைத் தவறு செய்வதற்கு அஞ்சும் உணர்ச்சியாக மாற்றலாம் ; ஆன்மாவிற்கு ஊறு விளைவிக்கும் கொடிய செயல் களுக்கு அஞ்சுமாறு செய்யலாம். கட்டுக்கம்', திரட்டுக்கம்" குழுஆக்கம்' போன்றவற்றையும் இங்ங்னமே தூய்மை செய்யலாம். பள்ளிகளில் உள்ளக்கிளர்ச்சிகளைத் தூய்மை செய்தல் முறை இக் காலத்தில் அதிகமாக மேற்கொள்ளப்பெறுகின்றது. தனிமை உணர்ச்சி யால் அல்லலுறுவர் சிறுவர்; அங்கும் இங்கும் திரிவதில் பேரவாக் கொள் வர். இதை மகிழ்ச்சிச் செலவுகளிலும் யாத்திரை நூல்களைப் படிப்பதி லும் திருப்பிவிடலாம். இன்றைய பள்ளிகள் பாடப்புறச் செயல்களால்" சிறுவர்களின் ஆற்றல்களைத் தூய்மை செய்கின்றன. சாரணர் இயக்கம், குடிமைப் பயிற்சி, இலக்கிய மன்றங்கள், நாடகக் கழகங்கள், சமூகத் தொண்டர்படை, பொருட்காட்சி சாலை போன்ற ஏற்பாடுகள் இதற்குப் பெருந்துணைபுரிகின்றன. பல்வேறு விளையாட்டு முறைகளும் தூய்மை செய்தலில் பெரும் பங்கு கொள்ளுகின்றன. உள்ளக்கிளர்ச்சிகளைத் தூய்மை செய்வதால் பல கலைகள் தோன்றவும் வாய்ப்புக்கள் நேரிடுகின்றன. சங்க இலக்கியத்திலுள்ள அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை போன்ற அகப்பொருள் நூல்கள் யாவும் காதலூக்கத்தைத் தூய்மை செய்யும் முறையில் எழுந்தவை யாகும். காமம் மிக்க கழிபடர்கிளவிகள் யாவும் இத்துறையைச் சார்ந்தவை. பிற்காலத்தில் எழுந்த தூது, உலா போன்ற சில்லறைப் பிரபந்தங்களையும் இதில் அடக்கலாம். உளவியல் அறிஞரில் ஒரு சாரார் எல்லாக் கலைகளும் காதலுக்கத்தைத் தூய்மை செய்தலால் தோன்றியவையே என்று வாதிப்பர். so sigăgăsă-instinct of ouriosity. or sigăsă-instinct of construction, 62.Égil (§3315 - instinct of collection. * * $45,35thgregarious instinct. 64 umi-Hp& Qālīābād; - extra-curricular activities.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/209&oldid=777944" இலிருந்து மீள்விக்கப்பட்டது