பக்கம்:கல்வி உளவியல்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#90 கல்வி உளவியல் துன்பம் பயப்பதென்று சொல்லுவதற்கில்லை. பொறிகள் ஏற்பட்டபிறகு பல சாதனங்களால் பல வேலைகள் எளிதாகிவிட்டன. மேலும், கடு வயதுள்ள ஒருவர் சில ஆட்டங்களை அல்லது ஆசனங்களைத் தம் சதையைக் கரைக்கும்பொருட்டு மேற்கொண்டால் விளையாட்டு வேலை யாக மாறுகின்றது. உற்சாகமுள்ள ஆசிரியர் ஒருவரும் தம் வேலையைத் தொண்டாகப் பாவித்து மெய்மறந்து அதன் பொருட்டே செய்து மன நிறைவு அடையலாம். இங்கு வேலை விளையாட்டாகின்றது. தற்காலப் பள்ளிகளில் மாளுக்கர்களைக் கட்டாயத்துடன் ஆடுகளத்திற்கு அனுப்பி மேற்கொள்ளப்பெறும் விளையாட்டு அவர்கட்கு வேலையாகத் தோன்றலாம். இவற்றைக் கூர்ந்து நோக்கில்ை அடிப்படையான உண்மை ஒன்றிருப்பது புலனுகும். நாம் காட்டின வேற்றுமைகள் யாவும் செயல்களில் இல்லை ; அவற்றில் ஈடுபடுபவர்களின் மனப்பான்மையைப் பொறுத் திருக் கின்றது. எத்தொழிலையும் நாமே மகிழ்ச்சியுடன் ஏற்று ஆற்றத்தொடங்கி ஞல், அது ஒரு பளுவாகத் தோன்றுவதில்லை; அத்தொழிலை மேற்கொள் ளும்பொழுது நமது இயல்பூக்கங்கள் திருப்தியடைந்தால், அது நமக்கு விளையாட்டாகவே தோன்றும். எனவேதான் உலகில் நடைபெறும் செயல்களனைத்தும் ஆண்டவன் அலகிலா விளையாட்டாகச் செய்து வருகின்ருன் என்ற உண்மையையும் இலக்கியங்களில் காண்கின்ருேம். எல்லையற்ற ஆற்றல் படைத்த ஆண்டவனது பேராற்றல் அவனது திருக்கூத்தாக விளங்குகிறது என்ற கொள்கையே சமயநூல்களில் * கூத்தரசு வடிவம் பெற்றுள்ளது. படைப்பு முதலிய முத்தொழில்களும் ஐந்தொழில்களும் இறைவிளையாடல்கள் என்று மெய்யறிவியலில் பேசப் பெறுகின்றன. இத்தகைய கொள்கையே கண்ணன் வழிபாடாகவும், முருகன் வழிபாடாகவும் வளர்ந்து பிள்ளைத்தமிழ் பாடும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. உளவியல் வளர்ச்சி காரணமாக நவீன கல்வி முறைகளிலும் விளை யாட்டு சிறந்ததோர் இடம் பெற்றுள்ளது. உலக வரலாற்றை உற்று நோக்கிளுல் மனிதனுடைய அருஞ்செயல்கள் யாவும் விளையாட்டின் அடிப்படையில் தோன்றியவை என்பது புலகுைம். புதிய கல்விமுறை கள் யாவும் விளையாட்டின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. இதைக் கவிஞர் பாரதியாரும், ' ஓடி விளையாடு பாப்பா,-நீ ஓய்ந்திருக்க லாகாது, பாப்பா ’’ - attitude.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/212&oldid=777951" இலிருந்து மீள்விக்கப்பட்டது