பக்கம்:கல்வி உளவியல்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும் 193 போர்வீரனாகவும் சிறுமி பொம்மை பராமரிப்பு செய்யவளாகவும் விளை யாடும் விளையாட்டுக்களும் இக்கொள்கைக்கு எடுத்துக்காட்டுக்களாகும். ஆளுல் கண்ணும்பூச்சு, கல்லெறிதல் போன்ற விளையாட்டுக்களை இக் கொள்கையால் விளக்க இயலவில்லை. ஆதிகாலச் செயல்களுக்குத் திரும்பும் கொள்கை19 : இக்கொள் கைப்படி மனித பரம்பரை பல்லூழி காலத்தில் அடைந்த அனுபவங்களேக் குழந்தைகள் தம்முடைய குழந்தைப் பருவத்தில் திரும்பவும் அடைகின் றனர். நாகரிகம் அடைந்த காலத்திலும் குழந்தைகள் ஆதிகால மனி தர்களின் செயல்களில் ஈடுபடுகின்றனர். விளையாட்டில் மரம் தொற்று தல், வேட்டையாடுதல், குகையமைத்தல், மீன்பிடித்தல் போன்றவற் றைக் காண்கின்ருேம். தாய்வயிற்றில் குழந்தை கருநிலையில் இருக்கும் பொழுது படிப்படியாகக் கீழ் கிலை உருவங்களே அடைவதைக் காண்கின் ருேம். இயற்கைப்பண்புகள் குடிவழி முறையாக உடலோடு பிறப்பது இயல்பே. ஆனல், மரம் தொற்றுதல், வேட்டையாடுதல் போன்றவை செயற்கைப் பண்புகள். மேலும், சொக்கட்டான் ஆடுதல், சீட்டாடுதல் போன்ற அறிவுடன் தொடர்பு கொண்ட விளையாட்டுக்களுக்கு இக் கொள்கை விளக்கம் தரவில்லை. காலுதற்கொள்கை' இக் கொள்கையை முதன் முதலில் கையாண்டவர் அரிஸ்டாட்டில் என்ற அறிஞர். துன்பியல் நாடகத்தைத் திறனுய்ந்த பொழுது அக் கொள்கை கையாளப்பெற்றது. பேதிமருந்து உடலிலிருந்து வேண்டாத பொருள்களை அகற்றுதல் போலவே, ஆன்மா வைச் சூழ்ந்துள்ள அழுக்குப்பொருள்களைத் துன்பியல் நாடகங்கள் அகற்று கின்றன என்பது அவர் கொண்ட கொள்கை ஒரு துன்பியல் நாடகத்தைக் காணும்பொழுது நம்மிடம் தேங்கிக் கிடக்கும் சில உணர்வுகள் செயற் பட்டு வெளிப்படுகின்றன. நாமும் கதைத் தலைவனுடைய உணர்வுகளைப் பெறுகின்ருேம் ; அவன் படும் துன்பங்களையெல்லாம் நாமும் ஓரளவு அனுபவிக்கின்ருேம். அவனிடம் நடைபெறும் உணர்வுப் போராட்டம் கம்மிடமும் தோன்றுகின்றது. அங்ங்னமே, விளையாட்டும் நம்மிடம் அடங்கிக் கிடக்கும் உணர்வுகள் வெளிப்படத் துணைசெய்கின்றது. நாகரிக வாழ்க்கையில் போரூக்கம்? செயற்படுவதற்கு அதிக வாய்ப்பில்லை. நாகரிக உலகில் விளையாட்டில் அவ்வாய்ப்பு கிடைக்கின்றது. ஒவ்வொரு விளையாட்டும் போலிச் சண்டையே; அதில் குருதி சிந்துவதில்லை; சினமும் ாe ஆதிகாலச் செயல்களுக்குத் # 5 buqú, Qasr cir soé; - Recapitulation theory. 71 strol; so Gamsiro is - cathartic theory. 12 போரூக்கம் . instinct of pugnacity. க.உ.-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/215&oldid=777958" இலிருந்து மீள்விக்கப்பட்டது