பக்கம்:கல்வி உளவியல்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றல் 197 கற்றல் மூன்று நிலைகளில் ஏற்படுகின்றது. அவை : முற்றுதல் அனுபவம், தன்னியக்கம் என்பவை. இவற்றைச் சிறிது விளக்குவோம். முற்றுதல் : கற்றலுக்கு முதல்நிலையாக வேண்டப்பெறுவது முற்றுதல். அஃதாவது, உடலுறுப்புக்கள், மூளையின் பகுதிகள் ஆகிய வற்றில் தகுந்த வளர்ச்சி ஏற்படுதல் வேண்டும். பக்குவம் அடைந்த பிறகே இயக்கம் பயன்படும். சிறுதேர் உருட்டும் பருவத்தில் கடை வண்டியைக் கொண்டு குழந்தைக்கு நடக்கக் கற்பிக்கின்ருேம். நமக்கு நடத்தல் எளிதாகத் தோன்றலாம். ஆளுல் நடத்தலில் பங்குகொள்ளும் உறுப்புக்கள் பக்குவப்படாவிட்டால், கடத்தலைக் கற்பிக்க இயலாது. கடத்தல் மிகச் சிக்கலான செயல். குழந்தை நடப்பதற்குத் தலையை கிலே கிறுத்தவும், உடலை நிமிர்த்தி நிலைநிறுத்தவும், கால்களின்மேல் சமநிலை பில் உடலை நிலைநிறுத்தவும், கால்களை ஒன்றன்பின் ஒன்ருக இயங்கவும் செய்யவேண்டும். எலும்புகளும், தசைகளும், நரம்புத் தொகுதியும் தகுந்த பக்குவமடைந்தபிறகே இவ்வியக்கங்களின் சேர்க்கை உண்டா கும். பக்குவம் அடைந்தபிறகு எந்த இயக்கம் தாளுகவே எழும். பிறகு வேண்டுவது பயிற்சியே. முற்றுதல் பயிற்றலுக்குத் தொடக்க நிலையாகும். பயிற்றலின் விரைவும் அகலமும் முற்றுதலால் பாதிக்கப் பெறுகின்றன. எனவே, குழந்தை எப்பொருளேயும் அறியப் பக்குவம் எய்துவதற்குமுன் கற்பித்தல் வீளுகும். குழந்தையின் முற்றுதலுக் கேற்றவாறு கற்பித்தல் அமையின் அது குழந்தைக்கு மகிழ்ச்சியையும் தரும் , அதல்ை பயனும் விளையும். எனவே, இந்நூல் முழுவதும் வளர்ச்சிப்படி வற்புறுத்தப்பெறுகின் து. குழந்தையின் ஒவ்வொரு பருவத்திற்கேற்றவற்றையே நாம் கற்பிக்கவேண்டும். அனுபவம்: அனுபவத்திற்கேற்பக் கற்றலும் வளர்கின்றது, முன்னைய அனுபவம் பின்னைய இயக்கத்தை அறுதியிடுகின்றது என்பதை நாம் நினைவிலிருத்த வேண்டும். சூடுண்ட குழந்தை தீயினைக் கண்டு அஞ்சுகின்றதன்ருே அனுபவத்தைக்கொண்டே நாம் தேர்ச்சி பெறு கின்ருேம் ; கற்கின்ருேம். கூர்ந்த மதியுடையவன் முன்னைய அனுபவத் தால் சிறந்த பயன் பெறுகின் ருன் , மூடனே அங்ங்னம் பயன் பெறுவ தில்லை. தன்னியக்கம் கற்றல் என்பது ஒருவருடைய தன்னியக்கத் தாலேயே ஏற்படும் செயல். ஆசிரியரின் செயல் துண்டுவித்தலுடன்

  • Giggs-maturation. S3guas- experience. - saranūsasself-activity.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/219&oldid=777966" இலிருந்து மீள்விக்கப்பட்டது