பக்கம்:கல்வி உளவியல்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 கல்வி உளவியல் கின்றுவிடுகின்றது; வழிகாட்டுவதுடன் அவர் பொறுப்பு முற்றுப்பெறு கின்றது. 'குதிரைக்கு நீர் காட்டலாமேயன்றி, அதனைக் குடிக்க வைக்க முடியாது’ என்ற பழமொழியை அறிக. நாம் கற்றவை அனைத்தும் சொந்தமாகக் கற்றலே ஆகும். எனவே, கற்பித்தல் கற்றலை மையமாகக் கொண்டது : கற்றலைத்தழுவியது; அத்துடன் தொடர்பு கொண்டது. கற்கும் செயல்கள் பலதிறப்பட்டவையாயினும், அவை இயக்கத் திறன் பெறல்க, கருத்துக்களைக்கற்றல்' என இரு வகையினுள் அடங் கும். மிதிவண்டி சவாரி, தட்டச்சுப்பொறியினை இயக்குதல், நூற்றல் போன்றவை முன்னதில் அடங்கும். செய்யுளை ஒப்புவித்தல், கணிதத் தேற்றம் ஒன்றை நிரூபித்தல், ஒரு பொறி செயற்படும் நுட்பத்தை அறிதல் போன்றவை கருத்துக்களைக் கற்றல் ஆகும். கற்பதில் சிறுவர்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுவர். கற்கும் ஆற்றல் சிறுவருக்குச் சிறுவர் மாறுபடும். சிலர் எளிதாகவும் விரை வாகவும் கற்பர் ; சிலர் மெதுவாகக் கற்பர் ; கற்பது கடினமானது என்று எண்ணுவர். சிலர் ஒரு முறை கேட்டதை உடனே திரும்பச் சொல்லு வர் ; பலமுறை திரும்பத் திரும்பப் படித்த பிறகே சிலரால் ஒப்புவிக்க முடியும், கற்கும் ஆற்றல் சாதாரணமாக இருபது யாண்டுகள் வரை வளர்ந்து கொண்டுவரும் என்றும், அதற்குமேல் அதிகமாக வளராது என்றும் சோதனைகளால் கண்டறிந்துள்ளனர். முற்றிலும் புதியவற்றை இருபது யாண்டுகட்குமேல் கற்பது கடினம். கற்கும் முறைகள் : இனி, கற்கும் முறைகளைப்பற்றிச் சிறிது அறிவோம். முதலாவது, முயன்று தவறிக் கற்றல் விலங்குகள் தட்டுத் தடுமாறிக் கற்கின்றன. மனிதர்களும் சில சமயம் அங்ங்ணமே கற்கின் றனர். கற்றல், நிலைமையுறு துலங்கலைப்போல் அவ்வளவு எளிதாகப் பெறப்படுவதன் று. அடிக்கடி நாம் சிக்கலான துலங்கல் தொடர்ச்சி யையோ, அல்லது பற்பல துலங்கல் வகைகளினின்றும் சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பதையோ கற்க வேண்டியுள்ளது. பார்த்துச் செய்து கற்றல் முறையால்" கற்க வாய்ப்பு இருப்பினும், முயற்சித்தவறு செயல்கள் இருந்தே தீரும். மிதிவண்டியை இயக்குவது, ந்ேதுவது போன்ற செயல் களே ஒருவர் காட்டியவுடன் கம்மால் அவற்றைக் கற்றுக் கொள்ள முடிவ தில்லை. அக்காட்சியால் சிறிது கற்றபோதிலும், நமது முயற்சியும் தவறும் * இயக்கத் திறன் பெறல் - motor learning. கருத்துக்களைக் கற்றல் - ideational learning. * (pujérgy oupolā oftpé - trial and error learning. * uri #g3 Q*igi sppé-learning by imitation.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/220&oldid=777970" இலிருந்து மீள்விக்கப்பட்டது