பக்கம்:கல்வி உளவியல்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 கல்வி உளவியல் அனைத்தும் மறிவினைச் செயல்களின் தொகுதியே என்கின்றனர். நாயின் வாயில் உணவு சேர்ந்தவுடன் உமிழ்நீர் ஊறுதல் இயற்கை மறிவினை யாகும். உணவிடும் போதெல்லாம் ஒரு மணியோசையை எழுப்பி வங் தால் உணவிடுதலும் மணியோசையும் இயைபு பெற்று முற்கூறிய தூண்டலின் துலங்கலாகிய உமிழ்நீர் ஊறுதல், பிற்கூறிய தூண்டலின் துலங்கலாகி விடுகின்றது. உணவின்றி மணியோசையை மட்டிலும் எழுப்பினுலும் நாயின் வாயில் உமிழ்நீர் ஊறுகின்றது. இதைக் கற்ற மறிவினை அல்லது ஆக்கமறிவினை என்பர். மனிதரிடமும் இத்தகைய ஆக்கமறிவினைகள் ஏற்படுகின்றன. ஒரு தாய் ஒரு குழந்தையிடம் பந்தைக் கொடுத்தால், அது அதனைத் தடவிப் பார்க்கின்றது. அப் போதே பந்து, பந்து என்று அவள் உரைத்தால் அதுவும் அப்பெயரை அப்பொருளுடன் தொடர்புறுத்தி, அதனைக்கண்ட பொழுதெல்லாம் "பந்து’ என்கின்றது. இங்ங்னமே, ஆக்கமறிவினை முறையில் மொழியறிவு உண்டாகின்றது. இவ்வாறே நம் விருப்பப் பொருள்களும், வெறுப்புப் பொருள்களும், அச்சம்போன்ற உள்ளக்கிளர்ச்சிகளும் அமைகின்றன என்பர் உளவியலறிஞர்கள். ஐந்தாவது, உள்நோக்குவழிக் கற்றல்'. இது மேற்கூறிய நான் கையும்விடச் சிறந்த முறையாகும். இது முழு நிகழ்ச்சியையும் ஊன்றிப் பார்த்தும், விவரங்களின் இடைத் தொடர்பு, காலத் தொடர்பு, காரண காரியத் தொடர்பு இவற்றை நன்கு அறிந்தும், தடுமாருமலும், தயக்க மின்றியும், “ஆகா, கண்டு கொண்டேன்' என்ற அனுபவம் தோன்றியும் இயங்கும் கற்றலாகும். தொடர்புகள் நன்கு அறியப்பெறுவதால் பிரச் சினையின் விளக்கம் தோன்றிக் கற்கின்ருேம். கற்றலுக்குச் சாதகமான ஏதுக்கள் கற்கும் விஷயத்தில் கற்போன் சிறந்த ஊக்கம் கொள்ளவேண்டும். இவ்வூக்கம் இல்லாவிடில் நற்பயன் கிட்டாது. கற்றல் அனைத்தும் நோக்கமுடையதே. உடனே, பின்னரோ ஏற்படும் பயனைக் குறிக்காத கற்றலே இல்லை. நோக்கம் அவசரமானதும் திட்டமானதுமாக இருந் தால், கற்றல் விரைவாக நடைபெறும் ; நோக்கம் தெளிவற்றிருந்தால் கற்றல் மெதுவாகவே நடைபெறும். தற்காலப் பள்ளிகளில் இப் பயனைப் பெறுவதற்குத் தன்ளுேக்க முயற்சி முறையைக் கையாளுகின்றனர். ஆசிரியரின் துணைகொண்டு சிறுவர்கள் தோட்டவேலை போன்றதைத் 14 a. sirĠærsgrug lá sbp sb - learning by insight.

  • * gösärğes)&& qpuJğ48 qpe»p - project, method.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/222&oldid=777974" இலிருந்து மீள்விக்கப்பட்டது