பக்கம்:கல்வி உளவியல்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றல் 201 திட்டம்போட்டு கிறைவேற்றுவதில் பல செய்திகளை ஊக்கத்துடன் கற்கின்றனர். கற்கவேண்டுமாயின், கவர்ச்சியுண்டாகி, கவனம் ஒரு முகப்பட்டு ஆழ்ந்த முயற்சி உண்டாக வேண்டும் என்பதை யாவரும் ஒப்புக் கொள்வர். பரிசுகளும் தண்டனைகளும் கற்றலைத் தூண்டுகின் றன. அதுபற்றியே பள்ளிகளிலும் தொழிலகங்களிலும் இவ்வுபாயங்கள் மேற்கொள்ளப் பெறுகின்றன. தற்காலத்தில் கல்வித்துறையிலும் தொழிற்சாலையிலும் முறையே சிறுவனும் தொழிலாளியும் தம்முடனே தாம் போட்டியிட்டுத் தாம் ஏற்கெனவே சாதித்ததைவிட அதிகம் சாதிக்க முயன்று சிறந்த தேர்ச்சி பெறுகின்றனரென்பது அண்மைக் கால ஆராய்ச்சியினின்றும் அறியக்கிடக்கின்றது. மந்த மாளுக்கன் தன் வகுப்பிலுள்ள மேதையுடன் போட்டி போடமுடியாது என்பது நாம் அறிக் ததே. அதற்கு அவனுக்குத் துணிவும் உண்டாகாது. ஆனல், தன்னுடன் போட்டியிட்டுத் தான் முன்பு சாதித்ததைவிட அதிகமாகச் செய்ய முயன்று வெற்றியடைகின் ருன், மேதை மற்றச் சிறுவர்களுடன் போட்டி யிட அதிக முயற்சி வேண்டாதது பற்றி வாளா இராமல் முன்பு தான் அடைந்த நிலையைவிட உச்சநிலையைப் பெற, ஆசிரியர்களால் இப் பொழுது ஏவப்பெறுகின்றன். இது அவனுக்குத் தூண்டுகோலாகி, அவன் தன் அறிவைப் பெருக்கிக் கொள்ளுகிருன் தொழிற்சாலைகளி லும் நிபுணர்கள் தங்கள் திறமையை இம்மாதிரியே மேம்படுத்திக் கொள்ளு கின்றனர். கற்றல் விதிகள் தார்ன் டைக் என்ற அமெரிக்க காட்டுக் கல்வி நிபுணர் பிராணி களும் மனிதர்களும் கற்கும்செயலைப்பற்றி மூன்று விதிகளைக் கூறியுள் ளார். அவை மூன்றும் சிருர்கட்குப் பயிற்றும் ஆசிரியர்களுக்குப் பெருக் துணையாக இருக்கும். அவற்றை ஈண்டு ஆராய்வோம். முதலாவது-பயன் விதி' இவ்விதி ஒரு செயலைப் பெறும் பொழுது ஏற்படும் விளைவின் சிறப்பை வலியுறுத்துகின்றது. “ஒரு தூண் டலும் துலங்கலும் இணையும்பொழுது இன்பம் உண்டாயின் அவ்விணைப் பின் வன்மை அதிகரிக்கின்றது ; துன்பம் ஏற்பட்டால் அவ் விணைப்பின் வன்மை குறைகின்றது” என்பது அவர் கூறும் விதி. இன்ப நிலை என்பது பிராணி தடுக்காமல் நீடித்துத் திரும்பப் பெற விரும்பும் శ&ు ; துன்பங்லை என்பது பிராணி நீடிக்காமல் முடிக்க விரும்பும் கிலே. 16 Lussorso - Law of Effect.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/223&oldid=777979" இலிருந்து மீள்விக்கப்பட்டது