பக்கம்:கல்வி உளவியல்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 கல்வி உளவியல் இதிலிருந்து நாம் அறியவை இவை : (1) கற்றலுக்கும் இன்பத்திற் கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இன்பத்தைக் கல்வியினின்று நீக்கி அளத்தல் அரிது. ஆயினும், ஒருகிலேயில் இன்பம் பயப்பனவற்றை அறிந்து அவற்றைக்கொண்டு ஏனைய தூண்டல்-துலங்கல் இணைப்பு வன்மைகளையும் முற்கூறலாம். (ii) பயன் அதிகமாயின் கற்றலும் அதிக மாகின்றது என்பது சோதனை காட்டும் உண்மை. பயன் அதிகமாயின் நோக்கம் நன்கு அமையும் ; நோக்கம் நன்கமையின், கற்றல் விரைவாக வும் திட்டமாகவும் நடைபெறும். (iii) துலங்கலுக்கும் பயனுக்கும் இடையேயுள்ள கால இடையீடு குறையக் குறையக் கற்றலின் வன்மை அதிகரிக்கும், வெற்றியையும் மனநிறைவினையும் தரும் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்கின்ருேம். தோல்வியையும் மனநிறைவின்மையையும் தரும் செயல்களை மேற்கொள்ளாதிருக்கக் கற்கின்ருேம். பாடங்களில் தேர்ச்சி பெறுபவர்களைப்போலவே ஆட்டங்கள், இசை, நடித்தல் போன்றவற்றில் தகுதி காட்டும் சிறுவர்கள் தங்கள் தோழர்களால் பாராட்டப்பெற்ருல் அதிகத் திருப்தியடைந்து அதனல் அத்துறைகளில் மேன் மேலும் திறன் பெறுகின்றனர். உற்சாகம் ஊட்டப் பெருதவர்கள்பால் தேர்ச்சிக்குறைவு உண்டாகின்றது. இதை நடைமுறையில் நாம் காண்கின்ருேம். வகுப்பறையில் பொருத்தம் வகுப்பறையில் இவ் விதியைக் கையாளும் வாய்ப்புக்கள் எண்ணற்றவை ; ஓரளவு வெளிப்படை யானவை. ஒரு சிலவற்றைமட்டிலும் ஈண்டு தருவோம். மாளுக்கர்கள் பள்ளியில் பெறும் அனுபவங்கள் மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கக்கூடியவையாக இருத்தல்வேண்டும். இதற்கு இக் கூறும் கிலைகள் நிலவவேண்டும் : 1) தம் தொழிலையும் மாளுக்கர்களையும் விரும்பும் கல்ல மனநலத்தைக் கொண்ட ஆசிரியர்கள் , (ii) மாளுக் கர்களின் தனிப்பட்ட வாழ்வை யொட்டியும் அவர்கட்குப் புரியவும் விளங்கவும் கூடிய பள்ளி வேலையும் செயல்களும் , (iii) ஓரளவு வெற்றி யைப் பயக்கக்கூடிய மாளுக்கர்களின் ஆற்றலுக்குட்பட்ட பள்ளிவேலை யும் செயல்களும் ; (iv) படிப்படியாகவுள்ளனவும் மாணுக்கர்கட்கே வளர்ச்சி எளிதில் புலனுகக்கூடியனவுமான பள்ளி வேலைகள் ; (v) புதுமை, மாருமல் ஒரு பொருளைப் பல்வேறு கோணங்களில் அணுகும் முறைகள் ; (wi) மானுக்கர்கள் சரியான வழிகளில் செல்லுகின்றனர் என்பதற்கு அறிகுறியாக ஆசிரியரின் வழிகாட்டலும், பாராட்டுதலும் உற்சாகமூட்டு தலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/224&oldid=777981" இலிருந்து மீள்விக்கப்பட்டது