பக்கம்:கல்வி உளவியல்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கல்வி உளவியல் வகுப்பறையில் பொருத்தம் : தமக்குத் தெரிந்தவற்றையெல்லாம் அடிக்கடிப் பயன்படுத்தும் வாய்ப்புக்களிருப்பின் மாணுக்கர் நன்கு கற்பர். சில வாய்ப்புக்களை இவண் கூறுவோம் : (i) அடிக்கடி வகுப்புச் சிறு தேர்வுகள் நடத்துதல் , (ii) வாய்மொழி விளுக்கள் மாளுக்கரின் குறை யறிதலுக்கும் மாணுக்கர் தம் அறிவை வெளிப்படுத்துவதற்கும் பயன் படுதல் , (iii) மீள் கோக்கு பாடம் ஒரு பாடத்தில் திரும்பப் பயிற்சி பெறுவதற்கும் பழைய அறிவையே புதிய அமைப்பில் வைத்துக்காண்டி தற்கும் வாய்ப்பு அளித்தல் ; (iv) தற்காலப் பள்ளிகளில் ஒப்புவித்த லுக்குப் பதிலாக மேற்கொள்ளப்பெறும் கலந்தாய்தல்' நன்முறை யில் பயன்படுதல் ; (v) தக்கமுறையில் ஆயத்தம் செய்யப்பெற்ற அளவான-வீட்டு வேலை பயிற்சிக்கு நல்ல வாய்ப்புக்கள் தருதல். மூன்ருவது-ஆயத்த விதி" இவ்விதி கற்பவனின் ஆயத் தத்தை வற்புறுத்துகின்றது. இது முற்றுதலுடன் தொடர்பு கொண்டது. "ஒரு துண்டல்-துலங்கல் தொடர்பு ஆயத்தமாயிருந்தால் இயங்குதல் மனநிறைவினைத் தரும் ; ஆயத்தமாயிராவிடில் இயங்குதல் துன்பத்தினை விளைவிக்கும்” என்பது விதி. ஆயத்தமாக இருக்கும்பொழுதுதான் கற்றல் நற்பயன் அளிக்கும். பக்குவமடைதல் அல்லது முற்றுதல். ஊக்கங்களின் வன்மை, மனப்பான்மை, பழக்கங்கள், பொதுத் திறன்கள், தனித்திறன்கள், வாழ்க்கையின் குறிக்கோள்கள் போன்ற பல ஏதுக் களைக் கொண்டது ஆயத்தம் என்பது. இவற்றுள் சில பிறவிப் பண்புக்கள்; சில கற்ற பண்புக்கள். படித்தலுக்கு’ ஆயத்தம் வராத குழந்தைக்குப் படித்தலேக் கற்பித் தல் பயன்தராது. படித்தலுக்கு ஏதுவான பண்புகளாவன : ஆறரை மனவயது’* கிறைவு பெற்றிருத்தல், போதுமான அளவு பார்க்கும் ஆற்றல், போதுமான அளவு கேட்கும் ஆற்றல், உள்ளக்கிளர்ச்சியின் மீது ஓரளவு ஆட்சி பெறல் ஆகியவை. இந்த அளவு குழந்தை பக்குவ மடையாவிட்டால் அது படிப்பதற்கு ஆயத்தமாகவில்லை என்று கொள்ள வேண்டும். ஆயத்தமாக இருப்பதற்குச் சில எடுத்துக்காட்டுக்கள் தருவோம். வகுப்பில் அடங்கிக் கிடந்து வெளிவந்த சிறுவன் மாலை ஐந்து மணிக்கு விளையாட ஆயத்தமாக இருக்கின்ருன் ; படிக்க ஆயத்தமாக இல்லை. as signrig urū-review lessons, assississo-recitation. *ossoissmüziso – discussion. **&uuğş gölgó - Law of Readiness. **ugšzs - reading. 2 suo ser attuğu - mental age.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/226&oldid=777986" இலிருந்து மீள்விக்கப்பட்டது