பக்கம்:கல்வி உளவியல்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றல் 205 மொழிப்பாடத்தில் தேர்ச்சியுடையவன் அதனைப் படிக்க ஆயத்தமாக உள்ளான்; கணிதப் பாடத்தில் தேர்ச்சிக் குறைவானவன் கணக்குப்போட ஆயத்தமாக இல்லை. ' வெற்றியைப்போல் வெற்றியைத் தருவது வேருென்றுமில்லை” என்பது ஆங்கிலப் பழமொழி. ஒரு நாள் பிற்பகல் 3 மணிக்குச் சூரிய - கிரகணம் பிடிக்கின்றது. வகுப்பிலுள்ள மாணுக்கர்களுக்குப் பாடவேளைப்பட்டியின் படி கடைபெறும் சமூகப் பாடத்தில் விருப்பமில்லை. எல்லோரும் புதிதாக நிகழவிருக்கும் சூரிய - கிரகணத்தைக் காணத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இங் கிலையில் சுவையற்றதாகவுள்ள சமூகப் பாடத்தைக் கற்பித்தலால் யாது பயன் விளையும்? புதுப்போக்கும்** அனுபவமுமுள்ள ஆசிரியர் இங்கிலையை மிகத் திறமையாகச் சமாளிக்கலாம். மாளுக்கர்களே வகுப்பிற்கு வெளியே இட்டுச்சென்று அந்த இயற்கை கிகழ்ச்சியைக் கண்டுகளிக்கச் செய்யலாம் ; புகைக்கண்ணுடியைக்கொண்டு ஒவ்வொருவரையும் அங் கிகழ்ச்சியைக் காணும்படிச் செய்யலாம். அதன் பிறகு பூகோளபாடத்தில் பல செய்திகளையும் விதிகளையும் பற்றிக் கற்பிக்கலாம். மாளுக்கர்கள் எதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர் என்பதை அறியாது கற்பித்தால் சிறிதும் பயன் இராது. தன்ளுேக்கத்தை கிறைவேற்றும் செயல்கள் அனைத்தும் ஒருவரை ஆயத்தமாக்குகின்றன. தன்ளுேக்கம் ஒருவர் தன் வேலையை ஒரே மனத்துடன் செய்ய இடங்தருகின்றது. வகுப்பறையில் பொருத்தம் : பெரும்பாலும் ஆயத்தக்கூறு முற்றி லும் புறக்கணிக்கப்பெறுகின்றது என்றே சொல்லலாம். “மட்டமான சிறுவர்களை வைத்துக்கொண்டு எப்படி மார் அடிப்பது ?” என்று பல ஆசிரியர்கள் அடிக்கடிச் சொல்லுவதிலிருந்தே இஃது ஒரளவு புலனுகும். அவர்கள் கருத்தில் "மட்டமான” என்பதற்குக் “குறைவான அறிதிறன் ஈவுள்ள’ என்பது பொருள். உண்மையாக நோக்கிளுல், 'ஆயத்தம் இல்லாத’ என்பதுதான் அதற்குப் பொருள். ஆசிரியர்கள் அந்த "ஆயத்தக்கூறு வரும் வரையில் காத்திருக்கத்தான் வேண்டும்; சில ருக்கு எப்பொழுதுமே அந்தக்கூறு வரவே வராது என்பதையும் ஆசிரியர் கள் உணரவேண்டும். இம் மாளுக்கர்கள் சில பாடங்களில் வெற்றுநிலைப் பொருள்களை உணர்தல் மிகமிக அரிதாகும். ஆயத்தம் வரும் வரையில் ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டியது மில்லை. சில முற்பயிற்சிகளால் இதனை விரைவில் சிறுவர்களிடம் உண்டாக்குதல் இயலும். (எ . டு. தொடக்கநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சிறுவர்களிடம் சில எளிய கதைகளைப் படிப்பதாலும் சொல்லுவதாலும், Touggourse - originality.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/227&oldid=777988" இலிருந்து மீள்விக்கப்பட்டது