பக்கம்:கல்வி உளவியல்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 கல்வி உளவியல் காய் கறிக்குதவாது, பள்ளிக்கணக்குப் புள்ளிக்குதவாது’ என்ற பழமொழிகளைப் பிரயோகம் செய்யவேண்டிய அவசியமே இல்லை. ஜான் ட்யூயி என்பவர்தான் செய்தல் மூலம்கற்றல்' என்ற கொள்கைக்கு முதன் முதலில் வித்திட்டவர். பிற்கால வாழ்க்கை யைக் குழந்தை ஓரளவு பள்ளியிலேயே கண்டுகொள்ள வேண்டுமென்பது இவர் கொள்கை. இவரைப் பின்பற்றியே டாக்டர் கில்பாட்ரிக்' என்பார் பள்ளி உண்மை அனுபவம் பெறக்கூடிய ஓர் இடமாகத் திகழ வேண்டும்’ என்று கூறிஞர். பள்ளிநடைமுறை, கல்வி ஏற்பாடு, பாடத் திட்டங்கள் ஆகியவை யாவும் குழந்தையை நடுவாகவைத்தே அமைக்கப் பெறுகின்றன. நல்ல செயல்திட்டங்கள்42 பரம்பரைப் பள்ளியின் பாடப்பகுதியை நீக்கவோ ஒழிக்கவோ முயலுவதில்லை. கைத்தொழில் வன்மை, இயக்கச் செயல்வன்மை வாய்ந்தவர்கட்குத் திட்டம் வகுப்பது போலவே, அறிவுச் செயல்களுக்கும் அழகுச் செயல்களுக்கும் திட்டம் வகுக்கப்பெறல் வேண்டும் என்பது கில்பாட்ரிக்கின் நோக்கம். இவர் கண்ட கல்விமுறை தன்ளுேக்க முயற்சிமுறை’** என்று வழங்குகிறது. கில்பாட்ரிக் நான்குவிதமான திட்டங்களைக் கூறுகிருர். அவை : (1) ஆக்கச் செயல் திட்டம் : இத் திட்டத்தின் நோக்கம் வெளி யான உருவங்களை அமைப்பது. (எ டு. வீடுகட்டல், நடித்தல், எழுதுதல் போன்றவை. (2) சுவைத்திட்டம் அல்லது இன்புறு செயல் திட்டம்: இத்திட் டத்தின் நோக்கம் முருகுணர்ச்சி பெறுவது. (எ-டு. ஓர் ஓவியத்தைக் கண்டு களித்தல், இசையமுதுண்ணல், கதைகேட்டல், காவியம் சுவைத்தல் போன்றவை. (3) புதிர்ச் செயல் திட்டம்: இதன் நோக்கம் மனத்தில் தோன்றிய ஒரு விணுவிற்கு விடை காணுவது. (எ டு.) ஏன் சில மாதங் களில் மழை பெய்கின்றது ? இடியும் மின்னலும் ஒரே காலத்தில் தோன்று கின்றனவா ? என்பவை போன்றவை. (4) பயிற்சி அல்லது தனிக்கற்றல் செயல் திட்டம் : இதன் கோக்கம் ஓர் அளவான திறமையையோ அறிவையோ பெறுவதாகும். |ள டு. பெருக்கலில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைதல், தேசப்படம் படித்தல், நல்ல கையெழுத்துத் திறன் எய்துதல் போன்றவை. o 9 zerst L. gu& – John Dewey. 4 o@ariigi so tupaoú sppsö -learning by doing. 4.1 L-mâl-i älsöuro-fiš - Doctor Kilpatrick. 420&ué, fill-Lô - project. **žsirgsyss opub# opsop -project method.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/232&oldid=778000" இலிருந்து மீள்விக்கப்பட்டது